எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடகா வேட்பாளரை மறந்துவிட்டு மோடிக்கு வாக்குக் கேளுங்கள் - அமித்ஷா அறிவுரை.

(யார் பெயரைச் சொன்னால் மக்கள் வெறுப்பாளர்களோ அவர் பெயரை சொல்லச் சொல்கிறாரே - மோடிமீது ஏதாவது கோபமோ!).

சென்னைக்குக் குடிநீருக்குப் பெரிதும் பயன்படும் கிருஷ்ணா நீர் அளவு குறைப்பு.
(ஊருக்கு இளைத்தது தமிழ்நாடுதானா? பூனை இளைத்தால் எலி குசலம் கொண்டாடும் என்பது பழமொழி ).

2009 - சிவகங்கை மக்களவைத் தேர்தல், 2011 திருப்பத்தூர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
(தீர்ப்பு வந்து இனிமேல் என்ன பயனோ!).

வயலின் வித்துவான் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த நாள் நேற்று.
(மழை பொழிவதற்காக புழலேரியில் அமிர்தவர்ஷினி ராகத்தை வயலினில் வாசித்தவர் இவர். விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைக்கவில்லை).

அ.தி.மு.க.வில்  நடப்பது பதவிச் சண்டையல்ல; பங்காளிகள் சண்டை. - அமைச்சர் உதயகுமார்.
(ஓ, சொத்துகள் அதிகமோ!).

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பாலை கொண்டுவர மத்திய அரசு தயங்குவது - ஏன்? - அன்னா அசாரே
(அதன் முக்கிய பதவிக்கு வலுவான ஆர்.எஸ்.எஸ்.காரரைத் தேடிக்கொண்டு இருப்பார்கள்!).

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எந்த ஒரு மதத்துக்கும் எதிரானதல்ல. - பிரதமர் நரேந்திர மோடி.
(எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்கிறாரோ பிரதமர்?

இலாபம் ஈட்டாத பொதுத் துறை வங்கிகளை மூட மத்திய அரசு உத்தரவு.
(இலாபம் ஈட்டும் வங்கிகளில்தானே கொழுத்த கொள்ளைக்கு வகை செய்யலாம்!)

ஓடும் ரயிலில் சிறீசிறீ ரவிசங்கர் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் செய்ததாகத் தகவல் இல்லை.
(தந்தை பெரியார் கொள்கையிலிருந்து ரவிசங்கர்களும் தப்ப முடியவில்லை).


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner