எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆல்வார், மார்ச் 4 ராஜஸ்தானில் ஆல்வார் பகுதியில் நடைபெற்ற ஹோலி பண்டிகை திருவிழாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துக்கொல்லப்பட்டான்.

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பிவாடி நகரில் இருதரப்பினரிடையே நேற்று முன்தினம் (2.3.2018) மோதல் வெடித்தது. அம்மோதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 16 வயது சிறுவன் நீரஜ் ஜாதவ் தாக்கப்பட்டதில்,  கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தான்.

சிறுவனின் இறப்புக்கு காரணமானவர்கள் என மூவரின் பேரில் சிறுவனின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத் துள்ளனர். ஆனால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

காவல்துறை கண்காணிப்பாளர் புஷ்பேந்திரா சோலங்கி கூறிய தாவது:

'படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அவன் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அச்சிறுவன் உயிரிழந்தமையால், அச்சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையைத் தாக்கியுள்ளனர். காவல்துறையின் வண்டி களும் சேதப்படுத்தப்பட்டுள்ளனÕÕ என்றார்.

சிறுவனின் உறவினர்கள் கூறுகையில்,

“மூன்று பேர்மீது புகார் கொடுக்கப்பட்டும், அவர்கள்மீது இன்னமும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை’’ என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner