எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, மார்ச் 4 இடஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம், கல்வியை தனியார் மய மாக்கும் முயற்சி உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் போராடி வருகின்றனர். சமூக நீதிக்காக போராடும் மாணவர்கள் தந்தை பெரியார், புலே, சாவித்ரிபாய் புலே, பாபா சாகெப் டாக்டர் அம்பேத்கர் உருவப்படங்களுடன் கல்லூரியில் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டும், வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின்மூலமாகவும் சமூக நீதி காத்திட மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள்.
மும்பை, துல்ஜாப்பூர், அய்தராபாத் மற்றும் கவுகாத்தி ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் டாடா கல்வி நிறுவனங் களில் மாணவர்கள் வகுப்புப் புறக் கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடஒதுக்கீட்டின்படிதேர்வு பெற்று கல்வி பயிலும் விளிம்பு நிலை மாணவர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாண வர்களின் கல்வி உதவித் தொகை இது வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது கல்வி உதவித் தொகை நிறுத் தப்படுவதாக டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த் தப்பட்டவர்கள், பழங்குடியின மாண வர்களுக்கு மத்திய அரசுமூலமாக பெற்று வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகைத்திட்டத்தை(Government of India Post Metric Scholarship-GOI PMS)  நிறுத்திக்கொள்வதாக டாடா சமூக அறி வியல் கல்வி நிறுவனம் கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர் அறிவிப்பையும் கல் லூரி நிர்வாகம் வெளியிட்டது. அதில், மகாராட்டிர மாநிலம் அல்லாத வெளி மாநிலங்களிலிருந்து கல்வி பயிலும் மாணவர்களில் தாழ்த்தப்பட்ட வகுப் பினர் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தாலும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய முழுக் கட்டணத்தையும் (விடுதிக்கட்டணம், உணவுக் கட்டணம் உள்பட) செலுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டது.

கல்லூரித் தலைவருக்கும், நிர்வாகப் பொறுப்பில்உள்ளவர்களுக்கும்,

ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில்,

“இப்பிரச்சினையில்  தீர்வு காண அனைத்துவித பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இந்நிறுவனத் தில் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர, மாணவர்களுக்கு எதிராக உள்ள கொள்கைகளை எதிர்த்து, கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்து போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் சமூக நீதி தொடர்ந்து நீடிக்கவேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவர் கூறியதாவது:

‘‘கல்லூரியில் சேரும்போது நாங்கள் பணம் கட்டவேண்டும் என்று கூற வில்லை. முன்பே தெரிவித்திருந்தால், கல்லூரியிலேயேசேர்ந்திருக்கமாட் டோம். என்னுடைய தந்தை தினக்கூலி யாக வேலை செய்துவருகிறார். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி பணம் செலுத்த முடியும்?’’ என்று கேட்டார்.

தற்போது ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசுதான் கல்வி உத வித்தொகைகளை அளிப்பதை நிறுத்தி விட்டது என்று மாணவர்கள் கவலை வெளியிட்டனர்.

டாடாசமூகஅறிவியல்கல்விநிறு வனத்தில் ஆய்வு படிப்பு (பி.எச்.டி) படித்துவருபவரானயஷ்வந்த்சாகடே கூறியதாவது: “தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகல்விஉதவித்தொகைக்கானநிர் வாக ஒதுக்கீட்டுத் தொகையில் 46 விழுக் காடு குறைத்துவிட்டது. அதனாலேயே நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner