எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூடநம்பிக்கையை ஒழிக்க பாடுபட்டவர்!

வே.ஹென்னிங்ஸ், சுந்தராபுரம், கோவை மாவட்டத்தி லிருந்து எழுதுகிறார்: 'குண்டு சட்டியில், குதிரை ஓட்ட வைத்தவர்' என்ற தலைப்பில், ஈ.வெ.ரா.,வை விமர்சனம் செய்து, இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.யுனெஸ்கோ அமைப்பு, 'சிறந்த சிந்தனையாளர்' என, ஈ.வெ.ரா.,வை, அறிவித்துள்ளதை, வாசகர் அறியவில்லை போலும். ‘ஈ.வெ.ரா., கொள்கைகள் எல்லாம், காந்தியிடம் கடன் வாங்கியது' என, வாசகர் கூறியுள்ளார். ‘பக்தி வந்தால், புத்தி போய் விடும்; புத்தி வந்தால், பக்தி போய் விடும்' என்ற கருத்தை, ஈ.வெ.ரா., கூறினார்; இது காந்தியின் கொள்கையா...மனித சமுதாயம் நடைமுறைக்கு ஏற்ற அறிவு சார்ந்த சிந்தனை, செயல்களால் மட்டுமே முன்னேற முடியும் என்பதே, அவரது கொள்கை. ஒருவன் மிகுந்த பக்தி மான்; பூஜை புனஸ்காரங்கள் செய்பவன். ஆனால், திருடும் குணம் உள்ளவன். பக்திமான் என்பதற்காக, யாரேனும் அவனை வேலைக்கு வைத்துக் கொள்வரா... அதைத் தான், ஈ.வெ.ரா., கூறியுள்ளார்! தனி மனித ஒழுக்கத்திற்கும், பொது வாழ்க்கை ஒழுக்கத்திற்கும், சிறந்த முன் உதாரணம், அவர். ஒருவனுக்கு பக்தியில்லை என்றால், யாருக்கும் நஷ்டமில்லை. ஆனால், ஒழுக்க மில்லை என்றால், அவனுக்கும் நஷ்டம்; அவனது குடும்பத்திற்கும், சமுதாயத்துக்கும் நஷ்டம். இது போன்ற கருத்துக்களை வலியுறுத்தியவர், ஈ.வெ.ரா.,பார்லிமென்டில், அண்ணாதுரை ஆற்றிய ஆங்கில உரையை கண்டு வியந்து, அவருக்கான நேரத்தை நீட்டித்துக் கொடுத்தார், நேரு. ஹிந்தி பேசாததாலும், ஆங்கிலத்தில் பேசியதாலும், நேரு கோபித்து கொள்ளவில்லையே!ஹிந்தி படித்து, வட மாநிலங்களில் வேலை செய்யும் தமிழர்கள், மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் உள்ளனர். தமிழையும், ஆங்கிலத்தையும் படித்து, தொழில்நுட்பங்களை கற்று தேர்ந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், மிக உயர்ந்த பதவிகளில் பலர் உள்ளனர். நிறைவான ஊதியத்தோடும், கவுரவத்தோடும் அவர்கள் வாழ்கின்றனர்.சமுதாய சீர்கேடுகளையும், மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க பாடுபட்டவர், ஈ.வெ.ரா., என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை!
நன்றி: ‘தினமலர்‘, பக்கம் 8
4.3.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner