எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அய்தராபாத், மார்ச் 4 மோடியைப் பற்றி விமர்சனம் செய்ததற்காக  தன்னை மிரட்டும் பாஜகவின ருக்கு மோடி என்ன சர்வாதி காரியா?அவரைவிமர்சனம் செய்யாமலிருக்க என கோபத் துடன் தெலங்கானா முதல்வர் பதில் அளித்துள்ளார்.

புதிதாக உருவான தெலங் கானா மாநிலம் குறித்து மத்திய அரசு அக்கரை இல் லாமல் இருப்பதாக பேசிய தெலங்கானாமுதல்வர்சந்திர சேகராவ் மோடி மீது கடுமை யானகுற்றச்சாட்டைவைத் தார். மோடி தனது சுயநலத் திற்காக கட்சியை வளர்ப்பதற் காகமாநிலங்களின்எதிர் பார்ப்புகளை கண்டுகொள் ளாமல்இருந்துவருகிறார்.இது அவரது சுயநலம் மற்றும் பொறுப்பின்மையை காட்டு கிறது என்று கூறியிருந்தார். இதற்கு தெலங்கானா பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர் வினையாற்றி வருகின்றனர். முதல்வரின் இந்தப் பேச்சு தொடர்பாக அவருக்கு உயி ருக்கு ஏதேனும் ஆனால் பாஜகபொறுப்பேற்காது என்று மறைமுகமாக கூறும் அளவிற்கு பாஜகவினர். பேசி யுள்ளனர். இதைத் தொடர்ந்து தெலங்கானா அரசியல் களம் மிகவும் பரபரப்புக்கு உண் டானது.

இதற்கு தெலங்கானா முதல் வர் பதில் அளித்துள்ளார். அவர், நான் மோடி என்ற தனிநபரைப் பற்றிஎன்றுமேதவறாகபேச வில்லை.பாஜகவினர் என்னைப் பற்றி பரப்பும் வதந்தி மிகவும் மோசமான ஒன்றாகும்.  மோடி வகிக்கும் பதவி, அதற்கான கண்ணியத்தைக் காக்க தவறி விட்டார் என்றுதான் நான் கூறினேன். மேலும்  நான் அவரை தெலுங்கில் காரிகி (மரியாதைக்குரிய ஒரு சொல்) எனக் கூறியதை பாஜகவினர் மோசமான வார்த்தையாக திரித்து போலியான வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இதற்காக அவர்கள் என்னுடன் மோத விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.   பதிலுக்கு நானும் யாரையும் தனிப்பட்ட தடித்த வார்த்தைகளால் விமர்சிக்கப் போவதில்லை.

என்னை  பொதுமேடைகளில் அவதுறாகப் பேசிவரும் பாஜக பிரமுகர்கள் சிறிது கண் ணியம் காக்க வேண்டும். மோடி இருக்கும் பதவி ஒன்றும் விமர்சனத்திற்கு அப் பாற்பட்டதல்ல! மோடி என்ன சர்வாதிகாரியா? அவருக்கான பதவி மக்கள் வழங்கியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மக்கள் பணி செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் போது கேள்வி எழத்தான் செய்யும், இது குடியரசு நாடுதானே, இதை மோடி எப்போது சர் வாதிகார நாடாக மாற்றினார். நான் மோடியை விமர்சித்தால் சிறைக்கு போக நேரிடும் என பாஜகவினர் மிரட்டுகின்றனர். நான் தாக்கப்பட்டால் அதற்கு பாஜக பொறுப்பேற்காது என்று மிரட்டுகின்றனர். நான் அந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்.

மத்திய அரசு இனிமேல் தெலங்கானா அரசை கண் காணிக்கும் என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிரட்டல் விடுத்தது பற்றி கூறிய முதல்வர் சந்திரசேகர ராவ், நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மட்டுமே- - அதில் கவனம் செலுத்தினால் போதும் அதை விட்டு விட்டு மாநில அரசு களைகண்காணிக்கும்பணியை மேற்கொண்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வார்,வேண்டு மென்றால் அவர்  கண்காணிக்கட் டும் எங்களுக்கு பயம் இல்லை.   தெலங்கானாவில் பாஜக என ஒன்று உள்ளதா?  அதை ஒரு முக்கிய கட்சி என்றே நாங்கள் கண்டுகொள்வதில்லை என தனது பதிலில் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner