எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூலை 1 ‘‘இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்குபவர்களை தண்டிக்கவோ, அவர்கள் முதலீட்டை முடக்கவோ அல்லது திரும்பப் பெறவோ சட்டங்கள் எதுவுமில்லை'' என்று அருண் ஜெட்லி ‘பல்டி' அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நிய நாடுகளின் கருப்புப் பணம் பதுக்குவதில் உலக நாடுகளில் முதலிடம் பெற்ற நாடு சுவிட்சர்லாந்து. இந்த நாட்டில் இந்தியர்கள் 2017-ஆம் ஆண்டு அதாவது மோடியின் பண மதிப்பிழப்பை 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அறிவித்த பிறகு சுவிட்சர்லாந்து நாட்டில் அதிக அளவு பணம் பதுக்கியவர்களில் இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடு களில் உள்ள பணம் பதுக்கியவர்களில் இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளது, முக்கியமாக இந்தியர்களின் பணம் பதுக் கல் 50- சதவீதம் உயர்ந்துள்ளது எனப் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரி வித்த அருண்ஜெட்லி, ‘‘சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் வங்கிகளில் உள்ள அனைத்துப் பணமும் கருப்புப் பணம் என்று நினைப்பது மிகத் தவறு.  அதில் இந்தியாவின் குடிமகன்களாக இருந்து, பின்னர் இன்னொரு நாட்டின் குடிமகனாக ஆன பின்னர்  தங்கள் பணத்தை பதுக்குப வர்கள் குறித்தும், பிற நாடுகளில் குடி யுரிமை பெற்ற இந்தியர்கள் பதுக்கி வைக்கும் பணம் குறித்தும் விசாரிக்க நம் நாட்டில் சட்டங்கள் இல்லை. மேலும், இந்தியாவில் குடிமகன்களாக இருப்பவர்கள் சட்டப்பூர்வமாகவும் டெபாசிட் செய்து வருகின்றார்கள்.அதேநேரத்தில்,சட்டத் துக்குப் புறம்பாக பணத்தை பதுக்கி வைத்தால், அது குறித்த தகவல்கள் யாராவது தெரிவித்தால் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்

அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து

இந்நிலையில் பியூஷ் கோயல் செய்தி யாளர்களைச் சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார்.

அவர், ‘‘இந்தியாவுக்கும் சுவிட்சர் லாந்துக்கும் ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, 2018 ஜனவரி 1 முதல் 2019 மார்ச் 31 ஆம் தேதி வரை, சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியாவிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்தின் தரவுகள் சேமிக்கப்படும். இந்த காலகட்டத்தில் யாராவது சட்டத்துக்குப் புறம்பாக டெபாசிட் செய்திருந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

இந்தியா, சுவிட்சர்லாந்திடம் பல மாதங்களாக கருப்புப் பணம் பதுக்கல் பற்றிய தகவல்களை கொடுக்குமாறு கேட்டு வருகிறது. இந்நிலையில், கோயலின் கருத்து கவனம் பெற்றுள்ளது. கோயலின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு காங் கிரசு தலைவர் ராகுல் காந்தி, ‘‘2014 ஆம் ஆண்டு, அனைத்துக் கருப்புப் பணத்தையும் எடுத்து வந்து நாட்டில் உள்ளவர்கள் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்றார். 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு கருப்புப் பணப் பிரச்சினையைத் தீர்க்கும் என்றார். 2018 ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து இந்தியர்களின் டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றவுடன், அவை அனைத்தும் வெள்ளைப் பணம் என்கிறார்'' என்று விமர்சனம் செய்துள்ளார்.

அருண்ஜெட்லியின் கருத்துப்படி நீரவ் மோடி, லலித்மோடி, சஞ்சுப் பாய்வாலா, மித்தல் சகோதரர்கள், விஜய்மல்லையா உள்ளிட்டவர்கள் சட்ட விரோதமாக  கோடிக்கணக்கில்வங்கிகளிடமிருந்துகடன் பெற்று அதைக் கட்டாமல் அயல்நாடு களுக்கு தப்பி ஓடிவிட்டனர். நீரவ் மோடி, விஜய்மல்லையா போன்றோர் அயல்நாடு களுக்குத் தப்ப முயன்றால் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று சிபிஅய் அறிக்கை கொடுத்தும் இவர்கள் வெளி நாடுகளுக்குத் தப்பியுள்ளனர்.  அந்தப் பணம் எல்லாம் சுவிஸ் வங்கியில் போடப் பட்டிருந்தால், அதனை மீட்க சட்டம் இல்லையா?

விஜய்மல்லையா தப்பிச் செல்வதற்கு முன்பு கருநாடகாவைச் சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர் ஒருவரை டில்லியில் சந்தித்துவிட்டு சந்தித்த அன்று மாலையே  ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் சென்றார். அவர் செல்லும்போது இரண்டு கண்டய்னர் அளவு உள்ள பொருட்கள் விமானத்தில் ஏற்றப்பட்டன என்றும் கூறப்படுகிறது. அதேபோல் வங்கிப் பணம் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு நீரவ் மோடி, அவரது மாமனார் மோகுல்பாய் போன்றோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். வெளிநாடுகளுக்குச் சென்ற நீரவ் மோடி அதன் பிறகு சுவிட்சர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்ற மோடியுடன் நிழற்படம் இணைந்து எடுத்துள்ளார்.

அதேபோல் லலித் மோடிக்கு 2016- ஆம் ஆண்டுவரை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அவரது கணவர், மகள் என அனைவருமே சட்ட ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். வெளி நாடுகளில் அவர் சிக்கலில்லாமல் இருக்க பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் மற் றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் உதவியுள்ளனர்.

முற்றிலும் கனவாகிப்போய்விட்டது

அருண்ஜெட்லியின் கூற்றுப்படி இவர்கள் அந்நிய நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள். ஆகவே, இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் முடியாது, இவர் களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறவும் முடியாது. அவர்களாக இரக்கப்பட்டு தந்தால் மட்டுமே நீரவ் மோடி, லலித் மோடி, விஜய்மல்லையா போன்ற மூவரிடமுமுள்ள சுமார் 32,000 கோடி ரூபாய்கள் திரும்ப வரும். இவர்களைத் தவிர அயல்நாட்டில் பதுங்கியிருக்கும் மோகுல்பாய், சஞ்சுப்பாய் வாலா உள்ளிட்ட பலர் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 5,000 கோடிகளைத் தாண்டும். சுமார் ஒருலட்சம் கோடி மதிப்புள்ள இந்திய மக்களின் பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு முற்றிலும் கனவாகிப்போய்விட்டது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner