எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அகமதாபாத், ஜூலை 1 குஜராத் மாநிலத்தில் பாஜக முதல்வர் விஜய் ருபானிக்கு எதிராக வதோரா மாவட்டத்திலிருந்து பாஜகவின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் போர்க் கொடி தூக்கியுள்ளனர். ‘இந் தியா டுடே’ இணையத்தில் (28.6.2018) இத்தகவல் வெளி யிடப்பட்டுள்ளது.

மேலும்சட்டமன்றஉறுப் பினர்கள் பன்னிருவர் அம் மூவருக்கும்ஆதரவாகஉள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வகோடியாதொகுதிசட்ட மன்ற உறுப்பினர் மது சிறீ வத்சவா, மஞ்சள்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யோகேஷ், சாவ்லி தொகுதி சட்டமன்ற  கேதன் இனாம்தார் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் விஜய்ருபானிக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பொதுமக்களின் பிரதிநிதி களாக சட்டமன்ற உறுப்பி னர்களின் எந்த கோரிக்கைக்கும் குஜராத்மாநிலபாஜகஅமைச் சர்கள்பலரும்,மாநிலஅரசு அலுவலர்களும் செவிசாய்ப்ப தில்லை என்று மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களும் குற்றம் சாற்றியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான பாஜக தலைவர் அமித் ஷா கடந்த 26.6.2018 அன்று சென்றிருந்தபோது, செய் தியாளர்கள் முன்னிலையில் கிடைத்தசொற்பவாய்ப்பின் போது,அரசின்செயல்பாடுகள் மீது மேலும் சட்டமன்ற உறுப் பினர்கள் பலரும் கோபத்துடன் உள்ளார்கள் என்பதை வெளிப் படுத்தினார்கள்.

ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருபவரான மது சிறீவத் சவா விரைவில் மற்ற சட்ட மன்றஉறுப்பினர்களும்தங் கள் அதிருப்தியை வெளிப்படுத்து வார்கள் என்று எச்சரித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் சிறீ வத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இன்று நாங்கள் மூன்று பேராகஇருக்கிறோம். நாளை 13அல்லது 23 பேராகஇருப் பார்கள்.பிரம்மா,விஷ்ணு, மகேஷ்வரனாகநாங்கள்மும் மூர்த்திகளாக ஒன்றிணைந்துள் ளோம். தற்பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த அரசு பொறுப்பேற்ற திலிருந்து முன் எப்போதையும் விட கடந்த ஆறு மாதங்களாக அலுவலர்கள் முறையில்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டு வருகிறார்கள். முன்கூட்டியேஅனுமதிபெற்று அமைச்சர்களைசந்திக்கசென் றாலும், அவர்களை நாங்கள் சந்திக்கவே முடியவில்லை’’ என்றார். சட்டமன்ற உறுப்பி னர்கள் யோகேஷ் படேல் மற்றும் கேதன் இனாம்தார் ஆகிய இருவரும் சிறீவத்சவா கூற்றை ஆமோதித்தனர்.

தங்கள்தொகுதியில்உள்ள பிரச்சினைகளில்முறைப்படி தீர்வு காணவேண்டும் என்பது தான் தங்களின் கோரிக்கை, ஆனால் அது நடக்கவே இல்லை என்று மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களும் கூறுகின்றனர்.

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“எங்களை அலுவலர்கள் முதல்வரை  சந்திப்பதற்கு  அனு மதி அளிக்கும்வரை நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. கட்சிக்கு எதிராகவோ அல் லது அரசுக்கு எதிராகவோ தங்கள் கோபமில்லைஎன்றும், அலுவலர்களின் அணுகுமுறை யின்மீதுதான் கோபம் உள்ளதாக அம்மூவரும் குறிப்பிட்டார்கள்.

கேதன் இனாம்தார் கூறு கையில்,

“அலுவலர்களைக் கொண்டுமக்களுக்குபணி யாற்றுவதற்காகவேஅரசுஎன் பது இருக்கிறது.  ஆனால், அலுவலர்கள் தடித்த தோலினராக இருந்துவருவதாகவே தோன்றுகிறது’’ என்றார்.

மூத்த அமைச்சர் புபேந்திர சிங் சுதாசாமா கூறியதாவது:

“பிரச்சினை எதுவாக இருந் தாலும், நானும்,  நிதின்பாயும் (துணை முதல்வர்), ஜித்துபாயும் (மாநில பாஜக தலைவர்) அவர்களிடம்தனிப்பட்ட முறை யில் பேசுவோம். அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்போம்’’ என்றார்.

பாஜக செய்தி தொடர்பாளர் பரத் பாண்டியா கூறியதாவது:

“மூவரும் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அறிவிக்கை அனுப்பியுள்ளார். கீழ்மட்டத்தில் நாங்கள் அவர் களிடம் தொடர்பில் இருந்து வருகிறோம். முறைப்படி அவர் களின் கோரிக்கைகளை தெரி விக்குமாறு கேட்டுக்கொண் டுள்ளோம்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner