எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், மே 26 -அமெரிக் காவில் நடந்த துப்பாக்கிச் சூட் டுக்கு அதிர்ச்சி தெரிவிக்கும், பிரதமர் நரேந்திர மோடி, தூத் துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு மவுனமானது ஏன்? என்று காங்கிரசு எம்.பி. சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின்ஓர் லாண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை யடுத்து பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடுபற்றி அறிந்து அதிர்ச் சியடைந்தேன்; உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங் கலையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.இதைச் சுட்டிக்காட்டியே சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடியின் ட்வீட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தமிழகத்தின் தூத்துக் குடியில் 13 இந்தியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு, மோடி பேசாமல் இருப்பதாக வெளியிடப்பட்ட மீம்ஸையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner