எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் போகலாம் என்ற முடிவும் - உச்சநீதிமன்றம் இதற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிப்பும்தான் அய்யப்பன் கோபப்பட்டதால் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது என்று கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை கு.மூர்த்தி டுவிட்டரில் பதிவு செய்தார் அல்லவா!

அய்யப்பன் அவ்வளவு சக்தி வாய்ந்தவனா? அதே அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. என்ன தெரியுமா?

கோவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால், பக்தர்கள் அய்யப் பன் கோவிலுக்கு வரவேண்டாம் என்பதுதான் அந்த அறிக்கை.

வெள்ளத்தால் அய்யப்பனே பாதிக்கப்பட்டு இருக்கும் போது, அய்யப்பன் கோபத்தால்தான் வெள்ளப்பெருக்கு என்கிறார் திருவாளர் கு.மூர்த்தி... ஹி.... ஹி... ஹி....


‘புஷ்' என்று போன அமர்நாத்

அமர்நாத் பனி லிங்கம் என்பதே சுத்த புரூடா. பனிக் காலத்தில் பனிக்கட்டி உருவாவதை வைத்துப் பனி லிங்கம் என்று கப்சா விட்டனர். அந்த லிங்கத்துக்குச் சக்தியிருந்தால் கோடை காலத்திலும் நிலைத்திருக்க வேண்டாமா? கோடை வெப்பத்தால் பனி உருகும் என்பது டிராயர் போடாத கோலி விளையாடும் சிறுவனுக்கும் தெரியுமே!

இப்பொழுது பக்தர்கள் கூட்டம் வராததால் அமர்நாத் யாத்திரை ஊத்தி மூடப்பட்டு விட்டதாம், ஹி... ஹி...

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner