எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன.1 புத்தாண்டையொட்டி தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரைக்குக் கடும் எதிர்ப்புக் கிளம் பியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

பிரதமர் மோடி நவம்பர் 8-ஆம் தேதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதற்கு பிரதமர் மோடி, 50 நாள்கள் பொறுத்திருங்கள். அதன்பின் பதில் அளிக்கிறேன் என்றார். இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று (டிச.31) உரை நிகழ்த்தினார். அப்போது வங்கி செயல் பாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என் றார். மேலும் சில அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மோடியின் வெற்றுப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சிகளும், தலைவர்களும் தெரிவித்துள்ள கருத் துகள் வருமாறு:

பிரதமர் மோடியின் பேச்சு

ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ்

பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. அதில் மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது. ஏராளமான கேள்விகளுக் கான பதில்கள் அளிக்கப்படாமல் புறக் கணிக்கப்பட்டுள்ளன. அவரது முடிவு நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி விடும். இந்த வழியில் நாட்டை வழி நடத்திச் செல்ல முடியாது என்று குற்றம் சாட்டியுள்ளது.

பணம் எடுக்க கட்டுப்பாடுகள்:

மம்தா பானர்ஜி  கண்டனம்

மத்திய அரசின் பண மதிப்பு நடவடிக்கையை ஆரம்பம் முதலே  கடுமையாக விமர்சித்து வரும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

மோடி அவர்களே, பொதுமக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. பணம் எடுக்க கட்டுப்பாடுகள் ஏன் இன்னும் நீடிக் கிறது? 50 நாள்கள் முடிந்துவிட்டது. மக்கள் கடினமாக சேர்த்து வைத்த  பணத்தை எடுக்கும் உரிமையை  நீங்கள் எப்படி தட்டிப்பறிக்க முடியும்? மக்களின் பொருளாதார உரிமையை அரசு வெறுமனே பறித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவால் சாடல்!

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டி யுள்ளார்.

மேலும் மோடியின் பேச்சை நம்புவதை மக்கள் நிறுத்தி விட்டார்கள் என்றும், சர்வதேச அளவில் கேளிக் கைப் பொருளாக அவர் மாறிவிட்டார் என்றும் சாடியுள்ளார்.

ஜனவரி முழுவதும்

காங்கிரஸ் போராட்டம்

உயர் மதிப்புடைய ரூபாய் நோட் டுகள் திரும்பப் பெற்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, ஜனவரி மாதம் முழுவதும் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபடவிருப்பதாக காங்கிரஸ் நேற்று (31.12.2016) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா  கூறியதாவது:

உயர் மதிப்புடைய ரூபாய் நோட் டுகள் திரும்ப பெறப்பட்டது, பாஜக தலைமையிலான மத்திய அரசின் மிகப் பெரிய ஊழலாகும். இந்த நடவடிக்கை, புதிய கருப்புச் சந்தைகளுக்கு வழிவகுத் துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத் தையும் பாதித்துள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் தோல்வி களை முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி 3 கட்டப் போராட்டங்களை முன் னெடுத்துள்ளது. ஏற்கெனவே தொடங்கி யுள்ள முதல்கட்ட போராட்டம், ஜனவரி 10-ஆம் தேதி வரை நடைபெறும். அதன் படி, ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு வார்கள்.

3, 4 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். 6-ஆம் தேதியன்று, மாவட்ட ஆட்சிய ரகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். 9-ஆம் தேதி, மகளிர் அணி உள்பட அனைத்து அணியினரும் ஒன்றிணைந்து, நாடு தழுவிய ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவார்கள். 10-ஆம் தேதிக்குப் பிறகு, 2 மற்றும் 3-ஆம் கட் டப் போராட்டங்கள் முன்னெடுக்கப் படும். ஜனவரி இறுதி வரை போராட் டங்கள் தொடரும் என்றார் ரன்தீப் சுர்ஜேவாலா.

அய்தராபாத்தில் ராகுல் பங்கேற்கும் கூட்டம்

ரூபாய் நோட்டு திரும்பப் பெறும்  நடவடிக்கைக்கு எதிராக அய்த ராபாத்தில் ஜனவரி மாதத்தில் நடை பெறவிருக்கும் காங்கிரஸ் பொதுக் கூட் டத்தில் அக்கட்சியின் துணைத் தலை வர் ராகுல் காந்தி பங்கேற்று பேச விருக்கிறார்.

இதுதொடர்பாக தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், "ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் மேற் கொண்டு வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அய்தராபாத்தில் ஜனவரி மாதத்தில் பொதுக்கூட்டம் நடைபெற விருக்கிறது. இதில், ராகுல் பங்கேற்க வுள்ளார். கூட்டத்துக்கான தேதி இன் னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.

கட்டுப்பாடுகள் நீடிப்பு

ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏ.டி.எம் களில் நாள் ஒன்றுக்கு ஒரு வங்கி கணக்கு மூலம் ரூ. 4,500 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் வாரத்திற்கு 24 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்ற முந்தைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

50 நாள்கள் என்று அறிவித்த கெடு வும் முடிந்ததால், பணம் எடுக்க மொத் தமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கி மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner