எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கைப் பிரச்சினை, மீனவர் பிரச்சினையை தலை கீழாக மாற்றுவேன் என்று தலை கீழாகக் குட்டிக்கரணம் போட்டார் அல்லவா நரேந்திர மோடி. பதவி ஏற்று பாதிக்காலம் முடிவுறும் நிலையில் தமிழக மீனவர்களின் பிரச்சினை எந்தக் கதிக்கு ஆளாயிற்று?

கைதுப் படலம் முற்றுப் பெற்றதா? இப்பொழுது என்னவென்றால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக, திமிர்த் தண்டமாக அறிவித்து விட்டதே! தலைகீழாகப் புரட்டித் தள்ளுவதாக 56 அங்குல விரிந்த மார்புப் புடைத்துப் பேசிய பேச்சு எங்கே? எங்கே? ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக அல்லவா முடிந்து விட்டது. சுண்டைக்காய் நாட்டுக்கு முன் சுண்டெலியாக சுருண்டு விட்டதா மத்திய பிஜேபி அரசு?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner