எழுத்துரு அளவு Larger Font Smaller Font

500 ரூ 1000 ரூ செல்லாது என்ற அறிவிப்புப் பிரச்சினை

50 நாள்களுக்குள் தீர்க்காவிட்டால் தண்டனை கொடுங்கள் என்று பிரதமர் மோடி சொல்லவில்லையா?

இதோ ஆதாரங்களின் குவியல்கள்!

புதுடில்லி, ஜன.2 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து 50 நாள்களுக்குள் பிரச்சினையைத் தீர்ப்பேன் - இல்லாவிட்டால் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று பிரதமர் மோடி சொன்னார். அவ்வாறு சொல்லவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சொல்லுகிறார். உண்மை நிலை என்ன?

இதோ:

அகமதாபாத்

1. டிசம்பர் 10, 2016

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்துமே 50 நாள்களில் முடிவுக்கு வந்து விடும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், எதிர்கால சந்ததியினர் நிச்சயம் பயனடைவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

2.Give me 50 days over scrapped notes, punish me if problems persist: Modi

நவம்பர் 13, 2016

நான் 50 நாள்கள் உங்களிடம் கேட்டுள்ளேன்; இந்த நாள்களுக்குள் சிக்கல் தீராவிட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் நீங்கள் தரலாம்.

http://www.hindustantimes.com/india-news/modi-turns-emotional-as-he-speaks-on-demonetisation-

3.    I appeal people of India to give me 50 days to end black money : PM Modi

zee News நவம்பர் 15, 2016

எனக்கு 50 நாள் கொடுங்கள்; கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுகிறேன். கோவாவில் பேசியது.

4.            நவம்பர் 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி உரையின் தமிழாக்கம்

இன்று இரவு 12 மணிமுதல் 500 ரூ. மற்றும் 1000 ரூ நோட்டுகள் செல்லாத காகிதமாகி விடும். உங்களிடமுள்ள 500 ரூ. மற்றும் 1000 ரூ நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள். வரும் 50 நாள்கள் உங்களுக்கு சிறிது சிரமம் தரும் நாள்களாக இருக்கும். அதன் பிறகு கருப்புப் பணமில்லாத, ஊழல் இல்லாத, தீவிரவாதம் இல்லாத இந்தியாவை நீங்கள் பார்க்கலாம்.

மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மறைப்பது ஏன்?

பணப் பிரச்சினை 50 நாள்களில் சரியாகும் என பிரதமர் சொல்லவே இல்லை. உதாரணத்துக்காக அவர் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு 31.12.2016 அன்று வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவுக்கு சட்டப் பேரவையில் பெரும்பான்மை உள்ளது. யார் முதல்வராக வர வேண்டும் என்பதை அதிமுகவினர்தான் முடிவு செய்யவேண்டும். புதிய தலைமையால் அதிமுக உடன் கட்சிகள் கூட்டணி அமைப்பார்களா என்பதை இப்போது சொல்ல முடியாது. பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு முதல் நிலை கட்சியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.

பணப் பிரச்சினை 50 நாள்களில் சரியாகும் என பிரதமர் எப்போதும் கூறவில்லை.

உதாரணத்துக்கு கூறுவதை தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்கின்றனர். விரைவில் பிரச்சினைகள் தீரும். இந்தியாவை வல்லரசாக்கும் நோக்கத்தில் நரேந்திர மோடி செயல்படுகிறார். வரும் புத்தாண்டு இந்தியாவின் ஆண்டாக இருக்கும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner