எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன.2 நாடு முழு வதும் புழக்கத்திலிருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து 50 நாள்கள் முடிந்துள்ள நிலை யில்,டில்லி முதலமைச்சர் கெஜ் ரிவால் நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பண மதிப்பிழப்பு நடவடிக் கையானது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஊழல். இது முற்றிலும் அரசியல் மற்றும் ஊழலால் வழிநடத்தப்படுகிறது. அனைத்து ஊழல்களின் மொத்த உருவம் இது.

எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சுதந்திர மான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலி யுறுத்துகிறாம். இதனால் பெற் றது என்ன? இழந்தது என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

டிசம்பர் 31- ஆம் தேதி நாட்டு மக்களுக்கு மோடி ஆற்றிய உரையில் ஒன்றுமில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அடைந்தஆதாயம்மற்றும்இழப் புகள் குறித்து பேசவில்லை.

சர்வதேசஅளவில்கேலிக் குரியவராகபிரதமர் மாறிவிட் டார். ஒட்டுமொத்த நடைமுறை களையும் உலகில் உள்ள பெரிய பொருளாதார வல்லுநர்கள் தவ றாக பேசுகின்றனர். டாக்டர் மன்மோகன் சிங் உலக அளவில் மதிக்கப்பட்டார். ஆனால், மோடியோ, பிரதமர் அலுவலகத்தின் நற்பெயரை அழித்து விட்டார்.

ரொக்கமில்லா பொருளா தாரம் குறித்து மோடி பேசுகிறார். நன்கொடைகளை பணமாக பெற்றுக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வை ரொக்கமில்லா அமைப்பாகஅவர் முதலில் மாற்ற வேண்டும். சுவிஸ் வங்கி யில் கணக்கு வைத்திருக்கும் 648பேரின்விவரம்உள்ளது. அவர்கள் கைது செய்யப்படுவார் கள் என மோடி அறிவித்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner