எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரயில் விபத்தில் மரணமடைந்தோர் குடும்பத்திற்கு இதுவரை 4 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டதை மாற்றி 8 லட்சம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் 20 ஆயிரம் என்.ஜி.ஓ. நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 74,678 கழிப்பறைகள் கட்டப்படவேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில்

தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வர்தா புயல் காரணமாக சென்னைக் கோயம்பேடு அங்காடிக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ.50 லட்சம்.

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று 48 சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் 4 பேர்; காயம்பட்டோர் 400-க்கும் மேல்.

பயிர் பாதிக்கப்பட்டதால் நேற்று ஒரு நாள் மட்டும் டெல்டா பகுதிகளில் மூன்று விவசாயிகள் அதிர்ச்சியால் மரணம்.

காவல் நிலையங்களுக்கு வருகின்றவர்களுக்கு வழிகாட்ட காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் வயல்வெளிகள் குறைந்துவிட்ட காரணத்தால் சூறைக் குருவிகள் கூட்டம் கூட்டமாக இலங்கையை நோக்கிப் பறக்கின்றன.

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

2035 ஆம் ஆண்டில் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் அதிகமாக நடமாடப் போகின்றனவாம்.

கடனுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவிகிதம் குறைத்தது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா!

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சில்லறை விற்பனை 25 சதவிகிதம் வீழ்ச்சி!

சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வாம்.

மன்னார் வளைகுடா தீவுகள் கடலில் மூழ்கும் அபாயத்திலிருந்து தடுக்கப்பட பனைமரம் வளர்க்கும் திட்டம் ஒன்றை வனத்துறை செயல்படுத்தி வருகிறது.

அரியானா மாநிலம் ரோடக் நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது கயவன் ஒருவன் செருப்பை வீசினான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner