எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் எச்சரிக்கை!

சென்னை, ஜன.4 மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு வந்தால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு பறிபோகும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறினார்.

பெண் கல்விக்காக போராடிய முதல் இந்திய ஆசிரியை சாவித்ரிபாய் புலேவின் 186 ஆவது பிறந்தநாள் நேற்று (3.1.2017) கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, பொது பள்ளிக்கான மாநில மேடை சார்பில், ‘கல்வியில் வகுப்புவாதம் வணிகமயம் எதிர்ப்பு நாள்’ என்ற கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

கருத்தரங்கை தொடங்கிவைத்து, முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசியதாவது:

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அழுத்தம் காரணமாக...

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான பொது தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (‘நீட்’), கடந்த ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சிபிஎஸ்இ கேள்விமுறையும், ‘நீட்’ தேர்வுமுறையும் ஒரே மாதிரியானவை. எனவே, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நீட் தேர்வு எளிதாக இருக்கும். மனப்பாடம் சார்ந்த மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை அதற்கு தயார்படுத்த பயிற்சி அவசியம்.

‘நீட்’ தேர்வு வந்தால் தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வெளிமாநில சிபிஎஸ்இ மாணவர்கள் சேர்ந்து விடுவார்கள். ஏழை மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல் லூரிகளில் படிக்கும் வாய்ப்பு பறிபோகும். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தில், தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விதிவிலக்கை தற்போது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பரந்தாமன் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner