எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதி ஏழுமலையானான நாமக்கடவுளைத் தரிசிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம் - மலை ஏறிக் கும்பிடு போடுவதும் கஷ்டமாம். இப்பொழுது திருப்பதி தேவஸ்தானம் விஞ்ஞான ரீதியான முடிவுக்கு வந்துவிட்டது.

‘வர்சுவல் ரியாலிடி’ எனப்படும் கணினிமூலம் உருவாக் கப்பட்ட தோற்றத்தை உண்மையான தோற்றம்போல காண் பிக்கும் தொழில்நுட்ப வசதியாம் இது. திருப்பதி மலையில் முக்கிய இடங்களில் நான்கு கேமராக்கள் மூலம் படம் எடுக்கப்படும். அவை ‘ஆப்’ ஆக மாற்றப்படுமாம் - இதைக் கண்களில் மாட்டிக் கொண்டு பார்த்தால் மூன்று நிமிடங்களில் ஏழுமலையான் மலையேறி சென்று தரிசனம் செய்த அனுபவம் கிடைக்குமாம்.

பலே! பலே! ஏழுமலையான் எவ்வளவு ‘அய்டெக்‘காக மாற்றப்படுகிறார். அடுத்து அவருக்கு ‘பேண்ட்’, ‘சூட்’ எல்லாம் போட்டு ‘கிராபிக்ஸ்’ செய்யப்படலாம்.

கிரிக்கெட் பிள்ளையார் வந்துவிடவில்லையா? இதுபோல, மாடர்ன் ஆவார் ஏழுமலையான் என்று எதிர்பார்க்கலாம்.

ஆமாம், இவை எல்லாம் வைணவ ஆகமத்தில் சொல் லப்பட்டுள்ளதா?

ஓ! அவையெல்லாம் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகும் சட்டம் வரும்போதுதான் - ‘நந்தியாக’ குறுக்கே நிற்குமோ!

ஆம் என்க!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner