எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ஏற்றுமதி தொடர்பான தகவல்களை அறிய http://www.epch.in

* அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாய்லாந்து நோக்கி நகர்வு.

* திராவிடர்த் திருநாளாம் பொங்கலையொட்டி தமிழ்நாடு எங்கும் 17,693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

* இலங்கை சிறையிலிருந்து 51 தமிழக மீனவர்கள் விடுதலை.

* தூத்துக்குடியில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற மாணவி மாரீஸ்வரி

(வயது 17) மரணம்.

* பங்கு சந்தை வர்த்தக முடிவில் அய்.டி.அய். நிறுவன பங்குகள் 4 சதவிகிதம் சரிவு (6.1.2017).

* 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பது வதந்தி என்கிறது ரிசர்வ் வங்கி.

* ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக் கணக்குகளையும் சோதனையிட மத்திய அரசு முடிவு.

* நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து கருத்தை வெளியிட்ட உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து, அவர்மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

* குடியாத்தம் அருகே வேலியில் சிக்கிய காட்டுப் பன்றியைக் கொன்று சமைத்து சாப்பிட்ட விவசாயி தவமணி (வயது 42) கைது!

* தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர்ப் பெயர்ப் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது (www.election.tn.gov.in).

* மோடியை அகற்றிவிட்டு எல்.கே.அத்வானி தலைமையில் தேசிய அரசு அமைக்கவேண்டும் என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா.

* அ.தி.மு.க.வில் இருந்திருந்தால் முதலமைச்சர் ஆகியிருப்பேன் என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்.

* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கக் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

* எம்.ஜி.ஆர். நினைவாக அஞ்சல் தலை, ரூபாய் நாணயம் வெளியிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்குக் கோரிக்கை.

* முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புக்கொள்ள மறுத்த உதய் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு இப்பொழுது ஒப்புதல் - சரண்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner