எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நேற்று இரவு தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில், காலில் விழும் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை மய்யப்படுத்தி விவாதம் ஒன்று நடந்தது. அதில் குன்றக்குடி அடிகளார் காலில் தந்தை பெரியார் விழ முயற்சித்தார் என்று ஒரு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது.

நான் 1964ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் மறைவு வரை அய்யா அவர்களுக்கு உதவியாளனாகப் பணியாற்றி வந்திருக்கிறேன். தொலைக்காட்சியில் குறிப்பிட்ட அந்தக் கால கட்டத்தில் அது போன்ற எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். காலில் விழும் கலாச்சாரத்தைக் கண்டித்தே வந்திருக்கிறார் அய்யா அவர்கள்.

ஆயிரக்கணக்கில் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சியில் தலைவர்களுக்கெல்லாம் தலைவரான மாபெரும் தலைவர் தந்தை பெரியார் பற்றி தவறான தகவல் தெரிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது - வருந்தத்தக்கது.

தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல காட்டிக் கொள்வதற்காக சில  விளம்பரப் பிரியர்கள் எழுதும் இதுபோன்ற 'புத்த ஜாதகக் கதைகளை' நம்ப வேண்டாம் என்றும், அலட் சியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

- தி. மகாலிங்கன்

தந்தை பெரியார் உதவியாளர்

திருச்சி 
8.1.2017   

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner