எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ராமேஸ்வரம், ஜன.8 ராமேஸ்வரம் மற்றும் புதுக் கோட்டையில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 10 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்தனர்.  அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல் லைத்தாண்டி வந்ததாக கூறி 2 படகுகளையும் அதில் இருந்த 10 மீனவர்களையும் சிறைப் பிடித்துள்ளனர். சனிக்கிழமை யன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண் டிருந்த கோடியக்கரை மீனவர் களின் 2 படகுகளில் ஒன்றை இலங்கை கடற்படையினர் சேதப்படுத் தினர். இதில் காய மடைந்த 7 மீனவர்களில் ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சிறைப் பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத் திலான பேச்சு வார்த்தை நடை பெற்று சில நாட்களேயாகும் நிலையில் மீனவர்கள் கைது, தாக்குதல் என இலங்கை தனது அத்து மீறலை தொடர்ந்து அர கேற்றி வருகிறது. இது மீனவர் கிராமங்களில் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner