எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

*              உத்தரப்பிரதேச சட்டப் பேர வைத் தேர்தலில் பிஜேபியின் கூட்டணி கட்சியான சிவசேனா பிஜேபியை எதிர்த்தே 150 தொகுதிகளில் போட்டி.

*              சென்னையில் உணவு விடுதிகள் கல்வி நிறுவனங் களில் ரூ.400 கோடி அளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவிக்கிறது.

*              தமிழ்நாட்டில் மாணவ - மாணவியின் தற்கொலை கடந்தஆண்டைவிட அதி கரித்துள்து.

*              பயிர்கள் கருகிய கார ணத்தால் மரணம் அடைந்த 116 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*              முடி திருத்தும் கட்டணம் ரூ.110 ஆக உயர்கிறது.

*              சபரிமலை கோவிலுக்குள் 10-50 வயது பெண்களை அனுமதிக்க முடியாது என்று திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.

*              உ.பி.யில் முலாயம் சிங்  - அகிலேஷ் யாதவ் ஆகியோர் மோதல் காரணமாக சமாஜ்வாடி கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்.

*              புதுச்சேரி அரசைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும்  2018ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பேன் என்றும் சவடால் விடுகிறார் துணை ஆளுநர் கிரண்பேடி.

*              தமிழ்நாடு பாடநூல் நிறுவ னத்தின் தலைவராக அஇஅதிமுகவைச் சேர்ந்த பா. வளர்மதி நிய மிக்கப்பட்டுள்ளார்.

*              சென்னை குடிநீர் தேவைக்கு வீராணம் ஏரியிலிருந்து நாள்தோறும் 76 கன அடிநீர் அனுப்பப்பட்டதற்குப் பதி லாக 35 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

*              ஒன்று முதல் +2 வரை மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்புக்கான தமிழ்நாடு அருசின் பாடப் புத்தகங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

*              தமிழ்நாடில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறும்.

*              2016இல் கல் முதலாளி ஏழு மலையானுக்கு உண்டியல் வருமானம் மட்டும் ரூ.1018 கோடியாம்.

*              பிகாரில் மதுவிலக்கு விழிப் புணர்வுக்காக 11,000 கி.மீ மனித சங்கிலிக்கு முதல் அமைச்சர் நிதிஷ்குமார் ஏற்பாடு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner