எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டின் இரண்டாவது பிரத மர், லால் பகதூர் சாஸ்திரி, உ.பி., மாநிலம், முகல்சராய் என்ற ஊரில், சாரதா பிரசாத் - ராம்துலாரி தேவி தம்பதிக்கு, 1904, அக்., 2 இல் பிறந்தார். மத்திய போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு, வணிக மற்றும் தொழில் துறை, உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மத்திய ரயில்வே மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பணிபுரிந்தார். அப்போது, அரியலூரில் நடந்த ரயில் விபத்தில், 144 பேர் பலியாகினர். விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, ரயில்வே அமைச் சர் பதவியிலிருந்து, சாஸ்திரி விலகினார்.

நாட்டின் முதல் பிரதமரான, ஜவகர்லால்நேரு, 1964 இல் கால மானார். அவருக்கு அடுத்ததாக, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவியேற்று, இரண்டு ஆண்டுகளில், அப்போதைய சோவியத் ஒன்றியத்திலிருந்த, தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, திடீரென ஏற்பட்ட மார டைப்பால், 1966, ஜன., 11 இல் காலமானார்.

சாஸ்திரிபற்றி ஆச்சாரியார் சொன்னதை இன்று இங்கு நினைவூட்டுவோம்.

‘‘ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின் னால் வரும் ‘சாஸ்திரி’ என்ற பட்டப் பெயர் அவருடைய ஜாதியைக்குறிக்கும்சொல்லா கவோ,குடும்பப்பெயராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்பட வில்லை என்பதையும், காசி வித்யாபீடத்தில்அவர்சாஸ்தி ரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதாக அவரால் பெறப் பட்ட படிப்புப் பட்டமே! என் பதையும் முதலில் மக்கள் அறியச் செய்யவேண்டியது அவ சியமாகிறது.

அவர் சாதாரண லால்பகதூரே ஆவார். பி.ஏ., எம்.ஏ., போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யாபீட சாஸ்திரி ஆவார். திரு.சாஸ்திரி என்று குறிப்பிடுவதும், திரு.பி.ஏ., திரு.எம்.ஏ., என்று குறிப்பிடுவது போன்றதாகவே ஆகும்.

மற்றும் லால்பகதூர் என்பதில் உள்ள பகதூர் என்பதும் ஒரு பட்டமோ அல்லது தகுதி காட்டும் கவுரவமோ அல்ல. அது அவரது சொந்த பெயரே ஆகும்‘’ என்று சி.ஆர். என்ற கையொப்பம் இட்டு ராஜாஜி எழுதினார் என்றால்... (‘சுயராஜ்யா’ 1.2.1964)

இதன் பொருள் என்ன? சாஸ் திரி பூணூல் போட்ட நம்பளவாள் அல்ல; ஏமாந்து விடாதீர்கள் என்று பார்ப்பனர்களுக்கு அடை யாளம் காட்டும் அசல் அக்ரகார குணம்தானே!

ஆச்சாரியார் அப்பட்டமான பார்ப்பன ஜாதி வெறியர் - என்பதற்கு இன்னுமொரு ஆதா ரப்பூர்வமான தகவல் உண்டு - சுயவிமர்சனம்கூட!

Infact, in one occasion Rajaji Proudly said that he valued his Brahmin hood more than his chief Minister ship (CARAVAN- APRIL (1) 1978 Gandhiji’s carusade against Casteism).

‘‘முதலமைச்சர் என்ற பத வியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன்’’ என்று ராஜாஜி கூறினார்; பார்ப்பனர்களுக்கு எப் பொழுதுமே இனப் பார்வைதான்!

குறிப்பு: இன்று சாஸ்திரி நினைவு நாள் (1966)

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner