எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ஊராட்சி அமைப்புகள் அவற்றின் தேர்தல்கள்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள  http//www.tnrd.gov.in/kosimani reports.html

* ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் தண்டனை என்று அறிவித்துள்ளார் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர்.

* சர்வதேச அளவில் மோசமான விமான செயல்பாட்டில் ஏர் இந்தியாவுக்கு மூன்றாவது இடமாம்.

* திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது குறித்து விமர்சனம் தெரிவித்த மலையாள திரைப்பட இயக்குநர் கமாலுதீன், நாட்டை விட்டு வெளியேறலாம் என்கிறது பி.ஜே.பி.

* ஜனவரி 13 ஆம் தேதிக்குப் பிறகும் பெட்ரோல் நிலையங்களில் பண அட்டையைப் பயன்படுத்தலாம்.

* வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகி விட்டோம் என்று புலம்புகிறார்கள் வங்கி ஊழியர்கள்.

* தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கலுக்குப் பேருந்துகளில் வெளியூர் செல்லுவதற்காக இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேலாம்.

* சென்னை காண்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு பணம் மாற்றிக் கொடுத்ததாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒப்புதல். (34 கோடி புது 2000 ரூபாய் நோட்டுகள் எப்படி வந்ததாம்? வங்கிகளிலிருந்துதானே நேரடியாக வந்திருக்க முடியும். மோடி ஆட்சியின் லட்சணம் இதுதானா?)

* சென்னையில் அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.5 விலை கூடியது.

* பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திங்களன்று வந்து சேரும்.

* நெருக்கடி காலத்தைவிட (எமர்ஜன்சி) நரேந்திர மோடி ஆட்சி மோசமாக உள்ளது என்கிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

* ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தவேண்டும் என்கிறார் பி.ஜே.பி.க்கு நெருக்கமான யோகா சாமியார் ராம்தேவ் (என்ன ஆதாயமோ!).

* சி.பி.அய். சதி அமைப்பாக மாறிவிட்டது என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா.

* முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சியால் மரணமடைந்ததாகக் கூறப்படும் 166 பேர்களின் குடும்பத்துக்கு  அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா தலா மூன்று லட்சம் ரூபாய் அளித்தார்.

* கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து பி.ஜே.பி.யிலிருந்து விலகி காங்கிரசோடு இணைகிறார்.

* சென்னைக்குக் குடிநீர் வழங்கிட திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 273 விவசாய கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க ஒப்பந்தம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner