எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது என்று ஒரு காலகட்டத்தில் தெற்கிலிருந்து உரத்த குரல் வெடித்துக் கிளம்பியதுண்டு.

இப்பொழுது ஆரியத் தத் துவம் திராவிடத் தத்துவத்தை விழுங்க நவீன யுக்திகளைக் கையாளுகிறது என்று கூறுவது சரியாகவே இருக்கும்.

பண்பாட்டுத் துறையில் கண்ணிவெடிகளை வைத்து பார்ப்பனீயம் தன்னிலிருந்து வேறுபட்டவர்களை - வேறு பட்டவர்களின் தத்துவத்தை வேரோடு சாய்த்திட வேகம் கொண்டு நிற்கிறது.

எடுத்துக்காட்டாக சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிடர்க்குரியது என்பது அறுதியிட்டு உறுதி செய்யப்பட்ட ஒன்றே - ஏன், அய்ராவதம் மகாதேவன்கூட ஏற்றுக்கொண்ட உண்மையே!

மொகஞ்சதாரோ, அரப்பா தொல் நகரங்களில் காணப்படும் சித்திர எழுத் துகளை ஆய்ந்தோர் அதற் குரியோர் திராவிடரே என்று உறுதி செய்தனர்.

1980ஆம்ஆண்டில்அவ் வெழுத்துகளை புது முறை விஞ்ஞான நுட்பத்துடன் ஆய்வு செய்த ருசியப் பேரறிஞர் குணோரோசோவ் திராவிடர் இனத்திற்குரியதே அவை என்று உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க அறிவியல் அறிஞரான வால்டர் பேர் செர்வீசு என்பவரும் மறு உறுதி செய்தார் (Scientific American - Monthly Magazine - March 1983).

உண்மை இவ்வாறு இருக்க வாஜ்பேயி தலைமையில் மத்திய ஆட்சி இருந்தபோது, அன்றைய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி என்ன செய்தார்?

திராவிடர்களுக்குரிய காளையை ஆரியருக்குரிய குதிரையாகக் கணினிமூலம் ‘கிராபிக்ஸ்’ யுக்திகளைக் கையாண்டு தம் குறுகிய பார்ப்பனீய நரி புத்தியைக் காட்டினார்; அது அம்பலப் படுத்தப்பட்டு விட்டது.

பிரபல திரைப்பட இயக் குநர் அசுதோஷ் கோவர்கர் மொகஞ்சதாரோ என்னும் பெயரில் திரைப்படம் ஒன்றை எடுத்தார். அதில், அது ஆரிய நாகரிகம் என்று சித்தரிக்கப்பட்டு இருந்தது என்பதுதான் கவனிக்கத்தக்கது!

மகாராட்டிரத்தில் பா.ஜ.க. - சிவசேனா ஆட்சி நடந்தபோது- இந்தியாவின் மிகப்பெரிய பிரிர்ஸ்வேல்ஸ் அருங்காட்சியகத்தில்  ஒரு பகுதியில் சிந்துசமவெளி நாக ரிக மாதிரிகள் வைக்கப்பட்டு இருந்தன. திராவிடத்தின் எச்சங்கள் என்றிருந்த பெயரை நீக்கிவிட்டு, அடையாளம் தெரியாத நாகரிக மக்கள் (Unknown Civilizations) வாழ்ந்த இடம் என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

புரிகிறதா - பூணூலின் மகிமை!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner