எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கிருஷ்ணா நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி தண்ணீர் (விநாடிக்கு 1700 கன அடி வீதம்) ஊத்துக்கோட்டைக்கு வந்து சேர்ந்தது.
காங்கிரஸ் போராட்டம்

மத்திய பி.ஜே.பி. அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிமுன் காங்கிரசு சார்பில் முற்றுகைப் போராட்டத்தினை தமிழகக் காங்கிரசு தலைவர் அறிவித்துள்ளார்.

நிறைவேறாது

பொங்கலையொட்டி ஆண்டுதோறும் சென்னையில் ‘தி இந்து லிட்; ஃபார் லைட்’ சார்பில் நடைபெறும் இலக்கிய விழாவில் பத்திரிகையாளர்கள் அக்ஷய முகுல், சயித் நக்வி ஆகியோர் ‘இந்தியாவில் இந்துராஷ்டிரம் அமைக்க விரும்பும் வலதுசாரிகளின் வேட்கை நிறைவேறாது - மக்கள் எதிர்த்து அணி திரள்வர் என்று கருத்துத் தெரிவித்தனர்.

ப.சிதம்பரம் கருத்து

மேற்கண்ட அதே கூட்டத்தில் பேசிய மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பண மதிப்பு நீக்கத்தால் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா - மகன்!

மறைமுகமாக...

மகன்: ஆர்.எஸ்.எஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று அத்வானி கூறியுள்ளாரே, அப்பா?
அப்பா: இதுவரை பெண்களுக்கு முக்கியத்துவம் மட்டுமல்ல - உறுப்பினராகக்கூட பெண் ஆக முடியாது என்பதை மறைமுகமாக சொல்லுகிறார், மகனே!


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner