எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புனிதம் என்றும், கடவுள் சக்தி என்றும் வண்ணம் வண்ணமாக  இறக்கைக் கட்டி பட்டம் போல வானத்தில் பறக்க விடுவது ஆன்மிகவாதியின் வழக்கம். பக்திக்குச் சேதாரம் ஏற்பட்டால் பிழைப்புப் போய்விடுமே, ஆதிக்கத்தின் ஆணிவேர் அறுந்து விடுமே என்ற ஆத்திரத்தில் நடக்கும் எத்து வேலைகள் இவை. ஆனால், நடைமுறை என்பது வேறுவிதமாகவே இருக்கிறது.

ஏடுகளில் வெளிவந்துள்ள தகவல்கள் எதைக் காட்டு கின்றன? மகரசங்கராந்தி என்று சொல்லி ‘புனித’ கங்கையில் படகு சவாரி செய்தவர்கள், படகு கவிழ்ந்து 25 பக்தர்கள் பலி - அதேபோல, மேற்கு வங்கத்தில் கங்கா சாகர் அருகே சாகர் தீவு பகுதியில் கங்கையில் புனித நீராடச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி!

இந்தக் கங்காதேவியைத் தூய்மைப்படுத்துவதற்கு கோடிக்கணக்கில் மத்திய பி.ஜே.பி. அரசு கொட்டி அழுகிறதாம்!.

மன்னிப்புக் கோருகிறார் பொன்.ராதா

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் -  இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும், வந்தே தீரும் என்று பராக்குப் பேசினார். சொன்னது நடக்கவில்லை என்பதற்காக பொது மன்னிப்புக் கோரியிருக்கிறார். அந்த வகையில் பார்க்கப் போனால், நிறைய தடவை இவர்கள் மன்னிப்புக் கோரவேண்டியிருக்கும்.

குமரிமுனையில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது கெடு வைத்துத் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி கொடுத்தார் - அது நடந்ததா? இன்னும் ஏராளம் உண்டு!


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner