எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?

ஏறுதழுவுதல் என்பதைப் பண்பாட்டின் அடிப்படையாகக் கருதி சீராய்வு மனு புதிதாக தாக்கல் செய்யவேண்டும்

சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி

தடியடியில் இறங்குவதை காவல்துறை நிறுத்தவேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

 

ஏறு தழுவுதல் என்பது தமிழர்களின் பண்பாட்டு அடிப்படை என்ற வகையில் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும். மாநிலக் காவல்துறை, ஏறுதழுவுதல் என்பதை சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதக் கூடாது - தடியடியில் இறங்கக்கூடாது  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘ஏறு தழுவுதல்’ என்ற நமது திராவிடர் தமிழர் - பண்பாட்டுத் திருவிழாவின் ஒரு பகுதியை - திட்டமிட்டே நமது பண்பாட்டு அடையாளச் சின்னங்களை அழித்தொழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை (ஜல்லிக்கட்டு) தடை செய்து உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை மாற்றிட - மறு பார்வை சீராய்வு மனு செய்தல் அவசியம் - தேவை.

இது மிருக வதை அல்ல; மாறாக அவைகளைப் பாதுகாத்து, வளர்ச்சி அடையச் செய்யும் ஒரு கோலாகலக் கொண்டாட்டம் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் போதிய முயற்சிகளை மத்திய - மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை.

தேவையற்ற தடியடிகள்!

அதுதான் மூலகாரணம்; இந்நிலையில், இளைஞர்கள், மாணவர்கள், கட்சி, அரசியல் சாராதவர் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டுள்ளனர். தடையை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, தேவையற்ற தடியடி நடத்துவது சரியான அணுகுமுறையல்ல.

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்ற வள்ளுவர் குறளின் அணுகுமுறையினை பற்பல தருணங்களில் காவல்துறையினர் பின்பற்றாததினால்தான் இத்தகைய விரும்பத்தகாத மக்கள் விரோத நடவடிக்கைகளை நமது காவல்துறையினர்  செய்கின்றனர். ஆட்சியாளர் இதை ஒரு சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகாது.

பண்பாட்டு அடித்தளம்!

எனவே, தடியடி போன்றவைகளை உடனடியாக நிறுத்தி, மக்களின் உணர்வுகளுக்கும் தலை வணங்கவேண்டும். அதனைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கையில் வெற்றி அடைய முயற்சிப்பதுதான் தமிழக அரசுக்கு  புத்திசாலித்தனமானதே தவிர, இதன் பின்னால் உள்ள பண்பாட்டுப் பாதுகாப்பு உணர்வின் அடி நீரோட்ட வலிமையைப் புரிந்துகொள்ளவேண்டாமா?

 

கி.வீரமணி    
தலைவர்,     திராவிடர் கழகம்.


சென்னை
16.1.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner