எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை பெரியார் திடலில் கோலாகல திராவிடர் திருநாள்

குடும்ப விருந்து, போட்டிகள், பெரியார் விருது - படத் திறப்புகள் - பன்மணித் திரள்!

தமிழர் தலைவர் - இனமுரசு சத்யராஜ் பங்கேற்று பகுத்தறிவுப் பேருரை

பெரியார் திடலே நிறைந்து வழிந்த மக்கள் திரள்

சென்னை, ஜன.16 சென்னை  பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் திராவிடர்த் திருநாள் வெகுசிறப்பாக நேர்த்தியுடன் நடைபெற்றது. குடும்ப விருந்து, விளையாட்டுப் போட்டிகள், படத் திறப்புகள், பெரியார் விருது அளிப்பு என்று பன்மணித் திரளாக நடைபெற்றது.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் Ôசுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்Õ நேற்று 15.1.2017 காலை  9 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெற்றது. கழகக் குடும்பத்தினர், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், பெரியார் பிஞ்சுகள் பங்கேற்ற விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. விளை யாட்டுப் போட்டிகளில் ஏராளமானவர்கள் திரண்டு பெரிதும் ஆர்வத்துடன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டார்கள். விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

திராவிடர் திருநாள்

திராவிடர் திருநாள் முதல் நாள் விழாவில்  மாலை 4 மணி யளவில் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், சிலம்பாட்டம், போர்க்கலை சிலம்பம், குத்து வரிசை, நகைச்சவை கலாட்டா என பல்வேறு நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

கலைமாமணி ஜான் பீட்டர் கலாவின் சலங்கை ஒலி கலைக் குழுவினரின் நாட்டுப்புறக் கலைகள், வீரக்கலை வாழ்க்கைக் கல்வி அறக்கட்டளை சிலம்பாட்டக் குழுவின் Ôநாகம் 16Õ போர்க்கலை சிலம்பம், குத்துவரிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தொல்தமிழர் சான்றுகள் ஒளிப்படக் கண்காட்சி

காலப்பயணம் வழங்கும் தொல் தமிழர் சான்றுகள் ஒளிப்படக் கண்காட்சியை கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி-.வீரமணி, இனமுரசு சத்தியராஜ் ஒளிப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார்கள்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்

23 ஆம் ஆண்டு விழா

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு  23 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழர்களை தெரிந் தெடுத்து தை முதல்நாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி ‘பெரியார்’ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 23ஆவது ஆண்டு விழா, திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா பண் பாட்டுத்திருவிழாவாக  நடைபெற்றது. விழாவில் பெரியார் விருதுகள் வழங்கும் விழா வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கு.தங்கமணி, உமா செல்வராஜ், வி.வளர்மதி, பூவை செல்வி, க.வனிதா, நாகவல்லி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கும்மிடிப்பூண்டி செல்வி வரவேற்றார். இறைவி இணைப்புரை வழங்கினார்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் செந்தமிழ்செல்வி அறிமுக உரையாற்றினார்.

படத்திறப்பு

விழாவில் எழுத்தாளர் கோ.வேள்நம்பி, கவிஞர் இன்குலாப், முனைவர் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.

எழுத்தாளர் கோ.வேள்நம்பி, கவிஞர் இன்குலாப், Ôதன்னானேÕ கலைக்குழு முனைவர் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் குறித்து கழகப்பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையாற்றினார்.

கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன், எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் இராஜூ முருகன் ஆகியோருக்கு முதல் நாள் (15.01.2017) விழாவில் தமிழர் தலைவர் அவர்கள் Ôபெரியார் விருதுÕ வழங்கி சிறப்பித்தார்கள்.

வேள்நம்பி.கதிரவன், கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன், எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் இராஜூ முருகன் உரையாற்றினார்கள். இனமுரசு சத்தியராஜ் பாராட்டுரையாற்றினார்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

கவிஞர் இன்குலாப் எழுதி, முனைவர் கே.ஏ.குணசேகரன் பாடிய Ôமனுசங்கடா... நாங்க மனுசங்கடா....Õ பாடல் ஒலிபரப்பப்பட்டது.

பாடல் ஒலிபரப்பைத் தொடர்ந்து தமிழர் தலைவர் தம் சிறப்புரையில், நாங்க மனுசங்கடா... என்னும் பாடலை முதல் முறையாக கேட்டேன். கவிஞர்கள் நீங்க மனுசங்களாடா? எனக் கேட்டுப்பாடலை எழுதிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விழா முடிவில் வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் ச.இ.இன்பக்கனி நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், திராவிடர் கழக மாநில மாணவரணி செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மோகனா அம்மையார், பகுத்தறிவாளர் கழக   மாநில அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன், பகத்தறிவாளர் கழக பொருளாளர் தமிழ்செல்வன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.வி.கோபால், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மேனாள் மேயர் சா.கணேசன், த.கு.திவாகரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், மருத்துவர் ஜெகன்பாபு, ஊற்றங்கரை பழ.பிரபு, பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் வழக்கரைஞர் கோ.சா.பாஸ்கர், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தென்சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.கனகா, சுதா அன்புராஜ், பெரியார் சயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, தங்க.தனலட்சுமி, பெலா.சந்திரா முனுசாமி, தமிழ்செல்வி, சவுமியலலிதா,  பவானி, வெண்ணிலா கதிரவன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், தாம்பரம் மோகன்ராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன்,   தமிழ்செல்வன், ஆ.வெங்கடேசன், கொடுங்கையூர் தங்கமணி, விடுதலைநகர் ஜெயராமன், புழல் ஏழுமலை,  க.ச.க.இரணியன், ஆவடி தமிழ்மணி, நாகூர் காமராஜ், தமிழ்செல்வி, சைதை தென்றல், விஜய் ஆனந்த், தமிழ்ஈழம், இசையின்பன், செஞ்சி ந.கதிரவன், தரமணி மஞ்சநாதன், தேவதாஸ், ஆவடி முத்துகிருஷ்ணன் ஆதித்யா, இனிய அன்பு, அபினவ் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.

பெரியார் திடலில் கீழடி அகழ்வாராய்ச்சியின் மாதிரி- பழங்கால குகை, மனிதர்கள் ஆகியவற்றினை தமிழர் தலைவர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner