எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு

அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியும்

அட்டர்னி ஜெனரல் கருத்து

புதுடில்லி, ஜன.20  ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசே அவசர சட்டத்தை பிறப்பிக்க அதிகாரம் உள்ளது என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டில்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

ஆனால், இச்சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.

இதுகுறித்து டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

விளையாட்டு என்பது முற்றிலும் மாநிலங்களின் அதி காரத்துக்கு உட்பட்டது. இதில் மத்திய அரசு எந்த விதத்திலும் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகும். இதன் அடிப்படையில், அதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், அதேநேரத்தில் காளைகள் துன் புறுத்தப்படாமல் இருக்க, அதற்கான பொருத்தமான விதிகளை அதில் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு முகுல் ரோத்தகி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner