எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* விவாகரத்தினை தேவாலயங்கள் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

* பஞ்சாப் மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்டிட கனடாவிலிருந்து 100 இந்தியர்கள் வருகை.

* ஜல்லிக்கட்டை ஆதரித்து இன்று நடிகர் சங்கம் மவுனப் போராட்டம்.

* விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் கொடுத்த கடன் தொகை ரூ.6,203 கோடி.

* சி.பி.அய். இயக்குநராக டில்லி காவல்துறை ஆணையர் அலோக் குமார் வர்மா தேர்வு.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ஆயுள் சராசரி 9 ஆண்டுகள் குறைவு என்கிறது சீனாவில் ஒரு ஆய்வு.

* ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அ.தி.மு.க. எம்.பி.,க்கள் இன்று சந்திப்பு.

* ஜல்லிக்கட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் ஆட்டோக்கள் ஓடாது.

* சென்னைத் தீவுத் திடலில் வரும் 23 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பொருட்காட்சி தொடக்கம்.

* ஜல்லிக்கட்டுக்காக தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 460 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 1.75 லட்சம் பேர் பங்கேற்பு.

* ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால், ‘பீட்டா’ சட்டப்படி எதிர்கொள்ளுமாம்.

* காஷ்மீர்ப் பண்டிட்டுகள் (பார்ப்பனர்கள்) உள்ளிட்ட புலம் பெயர்ந்தோர் மீண்டும் காஷ்மீர்ப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு திரும்புவதற்கான உகந்த சூழலை உருவாக்கிட வலியுறுத்தி ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner