எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.20 ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி  மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்த போராட்டம், தற்போது ரயில் மறியல், கடையடைப்பு என தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தமிழக ஜல்லிக்கட்டு அமைப்பு நிர்வாகி களுக்கு டில்லியில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக வீர விளையாட்டு மீட்புக் கழக தலைவர் ராஜேஷ் நேற்று கூறியதாவது:

‘‘வீர விளையாட்டு மீட்புக் கழகம், ஜல்லிக்கட்டு பேரவை, அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் விழா கமிட்டி நிர்வாகிகள் டில்லி செல்கிறோம். நாளை (இன்று) 11 மணிக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரை சந்தித்துப்பேச்சுவார்த்தைநடத்துகிறோம்.அப்போது சுமூக உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கையிருக்கிறது. இந்த ஆண்டே ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner