அய்தராபாத், ஜன.21 ஜல்லிக்கட்டுக்கு தெலுங்கு நடிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு, சேவல் பந்தயங் களை தடைசெய்வது திராவிட கலாச்சாரத்துக்கு எதிரான அடக்குமுறை என அவர்கள் குற்றம் சாட் டியுள்ளனர்-
ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்கக்கோரி தமி ழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பக்கத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களிலும் ஆதரவு பெருகி உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி தமிழகத்தில் நேற்று (20.1.2017) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனால் ஆந்திரா, தெலங்கானா ஆகிய பக்கத்து மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பல ரயில்கள் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப் பட்டன. சென்னை- - திருப்பதி இடையிலான சப்த கிரி எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் அருகே நிறுத் தப்பட்டது.
இதேபோல ஆந்திரா வழியாக சென்னை நோக்கி சென்ற பல ரயில்கள் ரேணிகுண்டா, புத்தூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டன. மேலும் கர்நாடகா விலிருந்து சென்னை நோக்கி சென்ற பல ரயில்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் நிறுத்தப்பட்டன.
இதனிடையே, தமிழக மக்களின் இந்தப் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலை தளங்களில் தெலுங்கு நடிகர்கள் நேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், “பொங்கல் விழாவின்போது, ஆந்தி ராவில் சேவல் சண்டையும், தமிழகத்தில் ஜல்லிக் கட்டும் நடைபெறுவது வழக்கம். இவை யெல்லாம் திராவிடர்களின் கலாச்சார அடையாளங்கள். ஆனால் இவைகளை முடக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. எனவே ஜல்லிக்கட்டுக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல நடிகர் மகேஷ்பாபு உட்பட பல நடிகர்கள் சமூக - வலைதளம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து இன்று (21.1.2017) அய்ந்தாவது நாளாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு வேண்டும், தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று இருபால் இளைஞர்கள், சிறுவர்கள், குழந் தைகள் உள்பட முழக்கங்களை எழுப்பி தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.