எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லண்டன், ஜன.21 இந்தியாவில் நிலவுகின்ற சமத்துவ மின்மையைஒழித்துக்கட்டவேண்டும்என்றுபொரு ளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்ற பேராசிரி யருமாகிய அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்

லண்டன் பொருளாதாரத்துக்கான கல்வி நிறுவனத்தில் உள்ள தெற்காசிய மய்யத்தில்  பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்  கருத்துரைகளை நல்வாழ்வுக்கான பொருளாதாரம்குறித்தகருத்துகளைக்கொண்ட தொகுப்பு  நூல் Ôசமூக நலத்துக்கான தெரிவுசெய்யப்பட்ட தேர்வுகள்Õ (Collective Choice and Social Welfare)
எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் அமர்த்தியா சென்  உரையாற்றினார்.

அவர் கூறும்போது, “நாம் நம்பிக்கையுடன் பணி யாற்றும்போது பலரின் கவனத்தையும் ஈர்க்கும். ஆகவே, முக்கியமானவை மற்றும் அவசியமானவை என பிரச்சினைகளில் தீர்வை எட்டுவது குறித்து ஆராய்ந் திடவேண்டும் என்று எண்ணுகிறேன். அரசியல்ரீதியில் தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று எண்ணுகிறேன்’’ என்றார்.

செய்தியாளர்களிடையே...

செய்தியாளர்களின் கேள்விக்கு அமர்த்தியா சென் பதில் அளித்தார். நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளநீங்கள்குறிப்பிடுகின்றநலவாழ்வுக் கான பொருளாதாரம் என்பது இந்தியாவில் செயல் படுத்தப்படுகிறதா?  என்கிற பிடிஅய் செய்தியாளரின் கேள்விக்கு  அமர்த்தியாசென் பதில் அளிக்கும்போது, “நல்ல கேள்விதான். சுருக்கமாக சொல்வதென்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது மட்டுமல்ல. பல ஆண்டுகளாகவே, சுகாதாரம், கல்வி குறித்தும் குறிப்பாக பெண்கள் கல்வி குறித்தும் எழுதி வந்துள்ளேன். என்னால் இயன்ற அளவில் செய்து வந்தள்ளேன். நோபல் பரிசுத் தொகையைக் கொண்டு Ôபிராட்சி அறக்கட்டளைÕ Pratichi Trust) என்கிற பெயரில் உருவாக்கியுள்ளேன். அறக்கட்டளையின் மூலமாக வங்கதேசத்தின் ஒரு பகுதி மற்றும் இந்தியாவின் ஒரு பகுதியில் செயல்படுத்தி வந்துள்ளேன். இந்திய பகுதியில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்வதுஅறக்கட்டளையின்பணியாக இருந்துள்ளது. வங்கதேசப்பகுதியில் பாலின சமத்துவமின்மைப் பிரச் சினைகள், குறிப்பாக பெண் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளை அறக்கட்டளை யின்மூலம் செயல்படுத்தி வந்துள்ளேன். இந்தியாவில் நான் எடுத்துக்கொண்டதைவிட,  கவலை அளிக்கக்கூடிய ஏராளமான பிரச்சினைகள் உள்ளன’’ என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமர்த்தியா சென் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தும் தம் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மை இல்லாமல் குறைந்த வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்பது கவலைக்குரியது என்றார்.

அமெரிக்க சூழல் என்பது சிக்கலானது. எளியவர்கள் குறித்து எப்போதும் டிரம்ப் பேசுவது கிடையாது. அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் மிகவும் குறைந்த அளவில் ஆதரவு பெற்றவர் டிரம்ப் என்றும் அமர்த்தியா சென் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner