எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜல்லிக்கட்டு மீதான அவசரச் சட்ட முன்வடிவு

குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது

புதுடில்லி, ஜன.21 ஜல்லிக்கட்டு மீதான அவசரச் சட்டம் சனிக்கிழமை இயற் றும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதன் முன்வடிவு 4 அமைச்சகங்கள் மற்றும் அட்டர்னி ஜெனரல் கருத்து களுடன் குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது

தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மீதான சட்ட முன்வடிவு வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை மதியம் இறுதி வடிவம் அளித்தது.

பிறகு சம்பந்தப்பட்ட மற்ற 3 அமைச்சகங்களுக்கு கருத்து கேட்டு உடனடியாக அனுப்பப்பட்டது. சட்ட முன்வடிவின் மீது சட்டம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று மத்திய அமைச்சகங்களும் தங்கள் கருத்துகளை சேர்த்து மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு மாலை அனுப்பி விட்டன.

இதில் சட்ட அமைச்சகம் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோஹத்கியிடம் அனுப்பி கருத்து பெற்று அனுப்பியது. இதை பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கு கிடைத்த கருத்துகளுக்கு ஏற்ற வகையில் சிறிய திருத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த அவசரச் சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விட் டது. இதை குடியரசுத் தலைவர் படித்து நாளை அனுப்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு உடனடியாக அனுப்பப்படும். பிறகு இது தமிழக அரசால் அதன் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இறுதி ஒப்புதல் பெறப்படும். எனவே, ஜல்லிக்கட்டு மீதான இந்த அவசரச் சட்டம் சனிக்கிழமை இயற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச் சர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் அனில் மாதவ் தாவே ஆகிய இருவரும் தம் வெளியூர் பயணங்களை ரத்து செய்து காத்திருந்தனர்.

மாநில அரசுகளுக்கான அவசரச் சட்டங்களைஅதன்ஆளுநரேபிறப்பிக் கலாம். ஆனால், அவை பொதுப்பட் டியலில் இடம் பெறாதவையாக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு பொதுப்பட்டியலில் (நீஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீtறீவீst) இடம் பெற்றுள்ளதால் அதை மாநில அரசு திருத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சட்டங்களைமத்தியஅல்லது மாநிலம் என இரு அரசுகளும் திருத்தம் செய்யலாம். இதன்படியே இன்று திருத்தம் செய்து அவசரச் சட்டம் இயற்றப்பட உள்ளது’ எனத் தெரிவித்தனர்.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு, பொதுப்பட்டியல் எண் 3- இல் 17 ஆவது இடத்தில் (மிருகவதை தடுப்புச் சட்டம் 1960) இடம் பெற்றுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் வராது என்று தமிழக அரசால் செய்யப்பட்ட திருத்தம் தமிழகத்தில் மட்டுமே செல்லும். இது இயற்றப்பட்ட ஆறு மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவை கூட்டப்பட்டுஇந்தஅவசரச் சட்டத்திற்கான வரைவு மசோதா முறையாக அமலாக்கப்படுவதும் அவசியம் ஆகும். இல்லையெனில், ஜல்லிக்கட்டு மீதான அவசரச் சட்டம் காலாவதியாக வாய்ப்பு உள்ளது.

-----------------

ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு இல்லை:

மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜன.21  ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்கக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜல்லிக்கட்டுபிரச்சினையில்சுமுக தீர்வு எட்ட மாநில அரசுடன் பேச்சு வார்த்தையில் இருப்பதால் இவ்வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு அளிக்க வேண் டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க உச்சநீதிமன்றம் இம்முடிவை எடுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை காலை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு முன் ஆஜரான மத்திய அரசின் அட் டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி இது தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.

அப்போதுஅவர்,“ஜல்லிக்கட்டு நடத்துவதில்தமிழகமக்கள் உணர்ச்சிபூர்வமாக ஒன்றிணைந்துள்ள னர்.  இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இந் நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறோம்“ என வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பில்லை என இசைவு தெரிவித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner