எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவரின்

அவசர - முக்கிய அறிக்கை

மாணவர்களின் தன்னெழுச்சி அறப்போர் வரவேற்கத்தக்கது - கி.வீரமணி

தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில அரசு கொண்டு வர விருக்கும் அவசரச் சட்டத்திற்கு, மத்திய அரசின் மூன்று துறைகளின் ஒப்புதல் பெற்றால் மட்டும் போதாது; இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கட்டாயம் தேவை; இன்றேல் இதை வைத்து, பிறகு சட்ட சிக்கல் ஏற்படலாம்;

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக குடியரசுத் தலைவர் கையொப்பம் - ஒப்பு தலைப் பெறுவதும் அவசரம் -  அவசியம் என்று சில சட்ட நிபுணர்களின் கருத்தும் உள்ளதால், அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் தமிழக அரசு.

இன்றேல் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போகக்கூடும்.

கி.வீரமணி

தலைவர்,     திராவிடர் கழகம்.

21.1.2017
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner