எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன.21 விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ராமாயண தரிசன கண்காட்சி ஒன்றில் காணொ லிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியபோது, மத அடை யாளங்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன் படுத்தியதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பானவீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணை யத்திடம் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்துக்கள் கடவுளாக வழிபடும் இராமனுடன், தனது தலைமையிலான அரசின் கொள்கைகளை ஒப்புமைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ராமாயணக் கதா பாத்திரங்களையும் குறிப்பிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

மதத்தின் பேரில் வாக்காளர்களின் உணர்வுகளைத் தட்டி யெழுப்பும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள உத் தரப்பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து இப்பிரச்சினை எழுந்துள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner