எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்ற திராவிடர் கழக மகளிர் மாநாட்டுத் தீர்மானம் பற்றி...

பதில்: அப்படியா! எந்தப் பத்திரிகையில் இச்செய்தி வந்தது? ஓஹோ, ‘விடுதலை’யில் படித்தீர்களா? சரி... முதலில் 50 சதவிகிதம் பெண் குழந்தைகள் பிறக்கட்டும். அதுவே குறைவாக இருக்கிறதே!

- ‘துக்ளக்‘, 25.1.2017

‘அட, துக்ளக்கே!’ பெண் குழந்தைகள் பிறப்பின் எண் ணிக்கை குறைந்ததற்கே - பெண் சிசுக் கொலை கள் நடப் பதற்கே காரணம் சமூகத்தில் பெண்கள் குடும்பத்துக்குச் சுமையாக இருப்பதுதானே!

50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராகக் கல்வி கற்று, வேலை வாய்ப்பும் பெற்று கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தால், பெண்கள் குடும்பத்துக்குச் சுமை என்ற எண்ணம் ஒழிந்துவிடுமே!

இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு - மனுதர்மப் புத்தியை விட்டு ‘துக்ளக்‘ வெளியில் வரவேண்டும்.

என்ன புரிகிறதோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner