எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* கடந்த ஆண்டில் ரயில் நிலையங்களில் காணாமல் போன 2128 குழந்தைகள் மீட்பு.

* ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் ஆதரவு.

* ஜல்லிக்கட்டுப் போராட்டம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து.

* ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.78 லட்சம் ஊக்கத் தொகை - தமிழக அரசு சார்பில் அளிப்பு.

* வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.

* 21 ஆம் நூற்றாண்டு பேச்சுவார்த்தைக்கான நூற்றாண்டாக இருக்கட்டும் என்கிறார் தலாய்லாமா.

* பீகாரில் மது விலக்குக்காக 11 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நித்தீஷ்குமார், லாலு உள்பட பலர் பங்கேற்ற மனித சங்கிலி (2 கோடி பேர் கைகோர்ப்பு - உலகிலேயே இதுதான் முதல் சாதனை).

* பாகிஸ்தானில் சந்தை ஒன்றில் குண்டுவெடித்து 25 பேர் பலி.

* உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார்.

* மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடப்பு ஆண்டில் 700 பணியாளர்களை வேலை நீக்கம் செய்கிறது.

* ஜல்லிக்கட்டுக்காக குடியரசுத் தலைவரை அதிமுக எம்பி.,க்கள் சந்தித்தனர் (பிரதமரை மட்டும் சந்திக்க முடியவில்லை!)

* தமிழ்நாட்டில் பெப்சி, கோக் விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவிப்பு (பரவாயில்லையே!)

* ஈரோடு - சிவகிரியைச் சேர்ந்த பொதுமக்கள் பெப்சி, கோக் போன்றவற்றிற்கு எதிராக பாடை கட்டி அந்தப் பொருள்களை ஊர் முழுவதும் தூக்கிச் சென்றனர் (பலே, பலே!)

* இலங்கை கொழும்பில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

* ஜெர்மனியிலும் பல்கலைக் கழக மாணவர்கள் ஏறு தழுவலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner