எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மெரினா உள்ளிட்ட போராட்டக் களங்களிலிருந்து காவல்துறை மூலம் மாணவர்கள் வலுக்கட்டாய வெளியேற்றம்

திராவிடர் கழகம் கண்டனம்

சிறு அசம்பாவிதமும் இல்லாமல் இராணுவக் கட்டுப்பாடாக அறப்போர் நடத்தும் மாணவர்களுக்குப் பாராட்டு - தலைதாழ்ந்த வணக்கம்!

சென்னை மெரினாவில் எந்தவித அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தாது அமர்ந்து அறப் போராட்டம் நடத்தும் மாணவர்கள் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேறும் நிலையில் தானே கலைந்துவிடக் கூடிய சாத்தியம் உள்ள நிலையில், காவல்துறையைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றச் செய்வது ஆட்சியாளரின் நல்ல அணுகுமுறை அல்ல.

முதல் அமைச்சர் அங்கேயே சென்று மாணவர்களிடையே நிரந்தரச் சட்டம் தான் என்பதை விளக்கியிருந்தால் இருசாராருக்கும் வெற்றி (win win) நிலைமை ஏற்பட்டிருக்கும்.

இதேபோல வெளியூர்களிலும் மென்மையான பொறுமையினைக் காக்க ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கத் தவறுவதை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக நிறுத்தவேண்டும்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

23.1.2016
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner