எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 23 2017ஆம் ஆண்டின் தமிழக சட்ட சபையின் முதலாவது கூட்டத்தில் தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர்ராவ் உரையாற்றினார்.

தமிழக சட்டமன்றத்தின் பதினைந் தாவது சட்டமன்றப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (23.1.2017) காலை 10 மணிக்கு கூடியது.

சட்டப்பேரவைத் தலைவர் ப.தன பால், செயலாளர் ஜமாலுதின் ஆகி யோர் பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களை வரவேற் றனர்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தனர். ஆளுநரும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தமிழில் வணக்கம் என்று சொல்லி தனது உரையை ஆங் கிலத்தில் நிகழ்த்தினார். அதன் தமிழாக் கத்தை பேரவைத் தலைவர் ப.தனபால் படித்தார்.

ஆளுநர் உரை நிகழ்த்தத் தொடங்கிய போது, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு அறிக்கையை வாசிக்க முற்பட்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலை யில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று தமிழக விவசாயிகள் தற்கொலை, மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தீர்வு காணாததற்கும், மத்திய அரசின் நீட் மற்றும் புதிய கல் விக் கொள்கையைக் கண்டித்தும், இக் கோரிக்கைகளை முன் வைத்தும், மத்திய மாநில அரசுகள் அதனைச் செவி மடுக்கத் தயாராக இல்லாத நிலையை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். இதேபோன்று காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner