எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜன.23 ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத் தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைமீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு பிற்பகலில் விசார ணைக்கு வருகிறது.

வழக்குரைஞர் சங்கரசுப்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இளைஞர்கள்மீது தாக் குதல் நடத்திய காவல்துறை மீது வழக்குப்பதிந்து நடவ டிக்கை எடுக்கக் கோரி முறை யிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து,தனிநீதிபதி மகாதேவன்இந்தவழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டுள் ளார். இந்த மனு இன்று (23.1.2017) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner