எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆளுநர் அறிக்கையில்

சில துளிகள்...

மாநிலங்களுக்கிடையிலான நிதிப் பகிர்வில் வேறு எந்த மாநிலமும் எதிர்கொள்ளாத அளவிற்கு தமிழ்நாட்டிற்கு முன்பு இருந்த நிதிப் பகிர்வைவிட 19.04 சதவிகிதம் அளவிற்கு 14 ஆம் நிதிக் குழு நியாயமாற்ற முறையில் குறைத்துள்ளது.

இயற்கைப் பேரிடர் காரணமாக தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளுக்காக 1,972.89 கோடி ரூபாயை தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கக் கோரியும்,  நிரந்தரக் கட்டுமானப் பணிகளுக்காக 20,600.37 கோடி ரூபாயைத் தமிழ்நாட்டுக்கு உடனடியாக வழங்குமாறும் மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜல்லிக்கட்டை நடத்திட ஒரு நிரந்தரத் தீர்வாக, அவசரச் சட்டத்தினை மாற்றீடு செய்ய, முறையான சட்ட முன்வடிவு உடனடியாகக் கொண்டு வரப்படும்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள்மீது இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் புரிந்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்து உரிய நீதி வழங்க மத்திய அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலை நாட்டி இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக 1974 ஆம் ஆண்டு இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெற்று, கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner