எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்.!  எதிர்ப்பு வெடிக்கிறது - வலுக்கிறது!

‘‘உ.பி. தேர்தலில் பி.ஜே.பி.யைத் துடைத்து எறிவோம்!''

லாலுபிரசாத் சூளுரைத்து எழுந்தார்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் கண்டனம்!

புதுடில்லி,ஜன.24ஆர்.எஸ்.எஸின்முக்கியபிரமுக ரும்,அவ்வமைப்பின்சிந்தனையாளர்என்றுகூறப் படுபவருமான மன்மோகன் வைத்தியா இட ஒதுக் கீட்டுக்கு எதிராகக் கருத்துக் கூறியதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிவிட்டது.

உத்தரப்பிரதேச தேர்தல் காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநில தேர்தல் நேரத்திலும் இதுபோன்று இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து, பீகார் தேர்தலில் மண்ணைக் கவ்வினார்கள்.

தற்போது ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மன்மோகன் வைத்யா ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, நாடுமுழுவதும் உள்ள சிறுபான்மையரின் நிலைகுறித்த அறிக்கையாக வெளியான சச்சார் கமிட்டி அறிக்கைகுறித்து விமர்சித்து பேசியதுடன், பார்வையாளர்களை நோக்கி கேள்விகளையும் எழுப்பியுள்ளார். சமூக பொருளாதார நிலைகளில் சிறுபான்மையோர் சமத் துவ நிலையை எட்டுவதற்கு சிறுபான்மையோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறும் சச்சார் அறிக்கையையும், சிறுபான்மையோர் இடஒதுக்கீட்டையும்ஏற்கமுடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வகுப்புகளின்அடிப்படையில்வரையறையின்றி நீண்ட காலத்துக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவ தென்பது நல்லதல்ல. அதற்கான காலவரையறை இருந்திடவேண்டும் என பீமாராவ் அம்பேத்கர் கூறியுள்ளதாக வைத்யா தமதுரையில் குறிப்பிட்டார்.

இடஒதுக்கீடு குறித்த பாஜகவின் கருத்து என்பதுஉத்தரப்பிரதேசதேர்தலில்பெரும்அளவி லான அரசியல் ரீதியில் பிரச்சினையை ஏற்படுத்தி யுள்ளது. தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுள்ள இப்பிரச் சினையின்மூலமாக, உத்தரப்பிரதேச தேர்தலில் உயர்ஜாதியினர்மற்றும்யாதவர்அல்லாதஇதர பிற் படுத்தப்பட்டவர்கள் கூட்டணியை கட்டமைக் கின்றபாஜகவிடம்,சமூகநீதியில்பாஜகவின் நிலைப்பாடு என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலையை பாஜகவினர் ஏற்படுத்தியுள் ளனர்.

வைத்யாகருத்துஊடகங்களில்வெளியான2 மணிநேரத்துக்குள்ளாக சமூக வலைத் தளங்களில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தம்முடைய டிவிட்டர் சமூக வலைத்தளப்பக்கத்தில் எம்.எஸ்.கோல்வால்கரின் நூலான (ஙிuஸீநீலீ ஷீயீ ஜிலீஷீuரீலீts) ஞானகங்கையில் உள்ள கருத்துகளை பதிவிட்டு தம்முடைய கருத்தினை தெரிவித்துள்ளார். மோடி, பாஜகவினரின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத் துகளால் பீகாரில் பாஜக துடைத்தெறியப்பட்ட நிலையில் உத்தரப் பிரதேசத்திலும் அதேநிலை எற்படும் என்றும் சூளுரைத்தார்.

2015 பீகார் தேர்தல் முதல் நாள்தோறும் சமூக வலைத்தளத்தில் லாலுபிரசாத் தம்முடைய கருத்து களை பதிவு செய்து வருகிறார்.

கடந்தமுறைபீகார்தேர்தலின்போதுஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆர்எஸ்.எஸ். ஏட்டில் நேர்காணலில் இடஒதுக்கீடு குறித்து தெரிவித்த கருத்தால் மாபெரும் எதிர்ப்பு புயலென எழுந் தது. பத்து ஆண்டுகளுக்குப்பிறகு லாலுவின் கூட்டணிக்கு அரசியல் அதிகாரத்தை வழங்க காரணமாகவும் அமைந்தது.

முன்பு, ஆர்எஸ்எஸ் ஏடான ‘ஆர்கனைசரில்’ நேர்காணலில் மோகன் பகவத் தெரித்த கருத்தைப் போன்றே தற்போது உத்தரப்பிரதேச தேர்தல் நேரத் தில் இடஒதுக்கீட்டுக்க எதிரான கருத்தை ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.

நாக்பூரில் கூடிய பொதுக்குழுவையடுத்து ஓராண் டுக்குப்பிறகு, ராஜஸ்தானில் கூடிய  ஆர்.எஸ்.எஸ் பொதுக்குழுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தியுள்ளது.

அம்பேத்கருக்குப்பிறகு, காசில்லா பரிமாற்றம் என்று மோடி மொபைலைப் ஏற்படுத்தி வருகிறார். இதுபோன்று நீண்ட பட்டியல் உள்ளது.

பாஜகவில் பிற்படுத்தப்பட்டவர்கள் எராள மானஅளவில்உள்ளனர்.இந்நிலையில்,இட ஒதுக்கீடுஎன்பதுதாழ்த்தப்பட்டவர்கள்,பழங் குடியினத்தவர்கள் மட்டுமல்லாமல் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் உரியதாகும் என்பதால், உத் தரப்பிரதேச தேர்தலுக்கு அதிக காலம் இல்லை. இந்தி பேசுவோரைக்கொண்டுள்ள மய்யமான பகுதி யில் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதை அனைவரும் காணலாம்.

பிரகாஷ் அம்பேத்கர் எச்சரிக்கை

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும பழங் குடியினத்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை ஒழித்திட துடித்துக்கொண்டிருக்கிறது என்று பிரகாஷ் அம்பேத்கர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.ஆர்.எஸ்.எஸ்.மூத்ததலைவர்இட ஒதுக்கீடு கொள்கையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து பிரகாஷ் அம் பேத்கர் இவ்வாறு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

அய்தராபாத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் உரிமை களுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாபா சாகேப் அம்பேத்கரின் பெயரனும், பரிபா பகுஜன் மகசங்கம் அமைப்பின் தலைவருமாகிய பிரகாஷ் அம்பேத்கர் பேசியபோது,

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட் டணி சமூகத்தில் பிரிவினைகளை ஏற்படுத்திட முயன்று வருகிறது.

அவர்களிடம் (பாஜகவினரிடம்) முழு பெரும் பான்மையுடன் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. அவர்கள் நினைத்ததை செய்து பார்க்கட்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன். சமூகத்தில் பிளவினை ஏற்படுத்திட ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

மனுவாதிகளுக்கு எதிராக போராடுவதாலேயே

Ôசெல்லாக்காசுÕ அறிவிப்பு

பணத்தாள்கள் செல்லாதது என்கிற அறிவிப்பு எளியமக்களை,தாழ்த்தப்பட்டவர்களை,பழங் குடியினத்தவர்களை,சிறுபான்மையினரைமற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களை குறிவைத்து எடுக்கப் பட்டநடவடிக்கையாகும்.மனுவாதிகளுக்கு எதிராக போராடுகிறார்கள் என்பதால்தான் இந்த ஒடுக்குமுறை. அதனால் பாதிப்புக்கு ஆளானவர்கள் எளிய மக்கள்தான்.

எளிய மக்களை சூறையாடி, பணக்காரர்களின் பணப்பெட்டிகளைநிரப்புவதையேஅரசுசெய் துள்ளது. ஏழை, எளிய மக்களை ஏதுமில்லாதவர்களாக ஆக்கி, பட்டினியில் வாடவிட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் முக்கிய சொத்தாக சுதந்திரம், சம உரிமைகள், சகோதரத்துவம் ஆகியவற்றை பாபா சாகெப் அம்பேத்கர் வழங்கியுள்ளார்.

இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் பேசினார்.

சீத்தாராம் யெச்சூரி

நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலை வெளியிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவே பாஜகவாகும்.ஆர்.எஸ்.எஸ்.தலைவர்ஒருவர்இட ஒதுக்கீடுகுறித்துதெரிவித்துள்ளகருத்துஉத்தரப் பிரதேச தேர்தலில் உயர் ஜாதியினரின் வாக்குகளை முன்னிறுத்தி கூறப்பட்டதாகும். பீகார் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்னரும் இதேபோன்று ஆர்.எஸ்.எஸ். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அறிக்கை அளித்தது.

சுதாகர் ரெட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர்சுரவரம் சுதாகர் ரெட்டி கூறும்போது, பாஜகமத்தியில்ஆட்சிக்குவந்தபிறகுதாழ்த்தப் பட்டவர்கள்மீதானதாக்குதல்கள்அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.அய்தராபாத்பல்கலைக்கழ கத்தின் ஆய்வு மாணவர்  ரோகித் வெமுலா தற் கொலை மரணத்தில் உண்மைகளை மூடிமறைக் கின்ற வேலைகளை அரசு செய்து வருகிறது என்றார்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்!

கோவா மாநிலத்தில் நடைபெறுகின்ற சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கூறினார்.

அவர் கூறியதாவது:

இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியுள்ளது. தாழ்த்தப் பட்டவர்களும்,பழங்குடியினத்தவர்களும்முன் னேற்றம் அடையும்வரை இடஒதுக்கீடு தொடரப் பட வேண்டும்.

நம்முடைய சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு எப்போதுமே சம அந்தஸ்து அளிக்கப்படாத நிலையே இருந்து வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து முற்றிலும் தவறானது என்றே நான் கருதுகிறேன். ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ள கருத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.தாழ்த்தப்பட்டவர்கள்,பழங்குயினத் தவர்கள் முன்னேற்றம் அடைகின்ற சூழ்நிலை ஏற்படாதவரை இட ஒதுக்கீட்டை நீக்க முடியாது.

கோவா மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்குப் பெரிதும் அநீதி இழைக்கப்பட்டு வருகின்ற நிலை உள்ளது. கோவா மாநிலத்தில் அரசுப்பணிகளில் பழங்குடியினத்தவருக்கானஏராளமானபணியிடங் களை நிரப்பாமலேயே பாஜக அரசு இருந்து வருகிறது. பழங்குடியினத்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதில் பாஜக அரசு அக் கறை இல்லாமல் உள்ளது. நாங்கள் பழங்குடியினத்தவர்களுககான அனைத்து காலிப்பணியிடங் களையும் நிரப்பச்செய்வோம். பழங்குடியினத்தவர் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி திருப்பிவிடப்படுகிறது. நாங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை முற்றிலுமாக பழங்குடியினத்தவர்களுக்கே பயன்படுத்துவதை உறுதி செய்வோம்.’’ என்று குறிப்பிட்டார்.

பாஸ்வான் கண்டனம்!

இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மத்திய உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி (எல்ஜேபி) கட்சியின் தலைவரான அவர், இதுதொடர்பாக

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட

அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளஉரிமையாகும்.அதையாரும்ரத்து செய்யமுடியாது.மகாத்மாகாந்திக்கும்,சட்ட மேதைஅம்பேத்கருக்குமிடையேஏற்பட்டபுனே ஒப்பந்தத்தின்அடிப்படையில்,நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள் ளது. தற்போதுள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யும் எந்தவொரு முயற்சியையும் லோக் ஜனசக்தி கட்சி எதிர்க்கும்.

தேர்தல் நெருங்கும் நேரம் பார்த்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தெரிவிப்பது வியப்பளிக்கிறது என்று பாஸ்வான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன், ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்வது பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner