எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* மூட்டு வலிக்குப் பச்சை குத்திக் கொள்வதால் எந்தவித பலனும் ஏற்படாது என்பது மருத்துவயியல் நிலைப்பாடு.

* ஆதார் பதிவுக்குக் கட்டணம் வசூலித்தால் சிறை.

* உலக அளவில் இந்தியக் கடலோரக் காவல்படை மூன்றாம் இடத்திற்கு முன்னேறும். (இப்போது 4 ஆம் இடத்தில் உள்ளது).

* ஆந்திரா - விஜயநகரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில்

41 பேர் பரிதாப மரணம்.

* ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் நேற்றிரவு முதல் ஓட ஆரம்பித்தன.

* மத்திய நிதிநிலை அறிக்கையை பிப்ரவரியில் தாக்கல் செய்யக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

* கருநாடகப் பெண் ஒருவருக்கு 4 கால்கள், இரு பிறப்பு உறுப்புகளுடன் ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

* ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி கோரி வரும் 26ஆம் தேதிமுதல் ஆந்திர மாநில மாணவர்களும், இளைஞர்களும் போராடத் திட்டமிட்டுள்ளனர் (எல்லாம் தமிழக மாணவர்கள் உபயம்தான்).

* சமூக வலைதளங்களில் உலவும் செய்திக்கும், தமக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று மறுத்துள்ளார் அய்.ஏ.எஸ். அதிகாரி சகாயம்.

* தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டைக் கொண்டுவர அனுமதித்ததுபோல கருநாடகத்தில் தடை செய்யப்பட்ட ‘கம்பாலா’ எனும் எருதுகள் பந்தய வீர விளையாட்டுக்கும் சட்டம் கொண்டுவரப்பட மத்திய அரசு அனுமதிக்கவேண்டும் என்கிறார் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா.

* வாராக் கடன் குற்றவாளி விஜய் மல்லையாவின் பெங்களூரு அலுவலகத்தில் சி.பி.அய். அதிரடி சோதனை நடத்தியது (ஏன், இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நடத்துவதுதானே!)

* வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தன்னை அதிகாரபூர்வ தூதராக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்.

* மனித உரிமைகள் ஆணையத்துக்கான டைரக்டர் ஜெனரல் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதில் காலதாமதம் ஏன் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை நோக்கி வினா எழுப்பியுள்ளது.

* இந்திய இராணுவ தளவாட தொழிற்சாலைகளில் 7038 பணியிடங்கள் காலி!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner