எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது முதலமைச்சர் அண்ணா

மேற்கொண்ட அணுகுமுறையை புதிய ஆட்சியின் முதலமைச்சர் கடைபிடிக்காதது ஏன்?

சென்னைக் காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகள்பற்றி-

உண்மை நிலையைக் கண்டறிய உயர்நீதிமன்ற

நீதிபதி தலைமையில்  விசாரணை தேவை!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

மாணவர்கள் போராட்டம் தமிழ்நாட்டின் உரிமைகள் - கேட்பாரற்றவை என்ற ஆணவத்திற்கு சரியான பாடம் - கி.வீரமணி

சென்னை காவல்துறை மேற்கொண்ட அடக்கு முறைகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறியுள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 1967 இல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தின்போது  முதலமைச்சர் அண்ணா மேற் கொண்ட அணுகுமுறையை அண்ணாவின் பெயரில் கட்சியையும், ஆட்சியையும் நடத்தும் புதிய ஆட்சியின் முதலமைச்சர் பின்பற்றாதது ஏன்?  என்று வினா எழுப்பியுள்ளார்.

அறிக்கை வருமாறு:

ஏறுதழுவுதல் போராட்டம்- சென்னைக் கடற் கரையில் நடைபெற்றதையொட்டி, நடைபெற்ற அறப் போராட்டத்தின் கடைசி நாளான 23 ஆம் தேதி (தமிழ்நாடு சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றிய நாளன்று) வெடித்த பல வன்முறை, தீயிடல்கள், வலுவில் பறிக்கப்பட்ட மனித உரிமைகள் - சென்னை திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதி, மீனவ சகோதரர்கள் வாழும் நடுக்குப்பம்... போன்ற  சில பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வலியச் சென்று அடித்துகைதுசெய்தல்போன்றஅராஜகநட வடிக்கைக்குக் காரணம் போராட்டக்காரர்கள் அல்ல; மாறாக காவல்துறையினரே என்ற பரவலான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களைக் காட்டும் வகையில், காவல்துறையினரே சென்று வாகனங்களுக்குத் தீ வைக்கும் காணொலிக் காட்சிகளை தொலைக்காட்சிகள் வெளிப்படுத்தின.

தமிழ்நாட்டுக் காவல்துறைக்குத் தலைகுனிவு!

இது உண்மையல்ல என்று காவல்துறையினர் மறுக் கலாம்; அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதைவிட தமிழ்நாட்டுக் காவல்துறைக்குத் தலைகுனிவு - அவமானம் வேறு இருக்கவே முடியாது.

உண்மையில்லை என்று தக்க சான்றாதாரங்களுடன் மறுத்து உண்மையை விளக்குவதில், காவல்துறையும் - அதிகாரவர்க்கமும், நிரூபிக்கவேண்டிய மகத்தான கடமையும், பொறுப்பும் அவர்களுக்கு உண்டு என்ப தோடு, தவறான பிரச்சாரங்களைப் பரப்பியதற்காக அத்தொலைக்காட்சி ஊடகங்களின்மீதும் சட்ட நடவடிக் கையும் பாய முடியுமே - காவல்துறை தவறு செய்யாமல் இருந்திருந்தால்!

ஏற்கெனவே மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு ‘நோட்டீஸ்’ கொடுத்து விளக்கம் கேட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது உண்மைகள் வெளி வந்தாகவேண்டும்.

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை!

எனவே, தற்போது பதவியில் இருக்கும்  உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரை நீதி விசாரணைக்கு தமிழக அரசால் அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தால் (வழக்குமூலம்) நியமிக்கப்பட்டு - குறிப்பிட்ட கால வரம்புக்குள் இறுதி அறிக்கையைத் தர ஏற்பாடு செய் யப்பட்டால்தான் - இனி வருங்காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளோ, நிகழ்வுகளோ ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தக்க பரிகாரம் - உதவி கிடைக்கவும் வழிவகுக்கப் பயன்படும்.

நடைபெறுவது குடியாட்சி; மக்கள் குரலே மகத் தான ஆணை என்பதை புதிய ஆளவந்தார்கள் மறந்து விடக்கூடாது!

அன்று முதலமைச்சர் அண்ணாவின் அணுகுமுறையும் - இன்று முதலமைச்சரின் செயல்பாடும்!

முதலமைச்சர் அறிஞர் அண்ணா, துணைக்குப் பாதுகாவலரைக்கூட அழைக்காமல் 1967 இல் மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே சென்றபோது - முதலமைச்சர் அண்ணாவுக்குக் குடிக்கக்கூட மாணவர்கள் தண்ணீர் வழங்காத நிலையிலும், சற்றும் பொறுமை இழக்காமல், மாணவர்களைஅப்பெருந்தகைஆட்கொண்ட அணுகுமுறையை இன்றைய முதலமைச்சர், அண்ணா பெயரில் கட்சியும், ஆட்சியும் நடத்துவோர் அறிந்து ஒழுகவேண்டும்.

இனியாவது புதிய ஆட்சி, ஜனநாயக முறையை - அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி - கருத்துக் கேட்கும் கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சிகளின் அணுகுமுறையைத் தவறாது பின்பற்றுவார்களாக!


கி.வீரமணி 
தலைவர்,    திராவிடர் கழகம்.


சென்னை
25.1.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner