எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்னணுப் பணப் பரிவர்த்தனை விவகாரம்:  அறிக்கையை சமர்பித்தது சந்திரபாபு நாயுடு குழு

புதுடில்லி, ஜன.25 இந்தியாவில் மின்னணு பணப்பரிவர்த்தனையை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 13 பேர் கொண்ட உயர்மட்டக்குழு கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு மின்னணு பணப்பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

மின்னணு பணப்பரிவர்த்தனை தொடர்பான இந்த முதல மைச்சர்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து தங்களது இடைக்கால அறிக்கையை சமர்பித்தனர்.

அந்த அறிக்கையில் பணமில்லா பரிவர்த்தையை ஊக்குவிப் பதற்கு செய்யப்பட வேண்டிய பல்வேறு சலுகைகள் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தன.

அந்த அறிக்கையில், வணிகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகைகள் வழங்குதல், டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரியை திருப்பி தருதல், மைக்ரோ ஏடிஎம் பயன்படுத்தினால் வரிச்சலுகை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஸ்மார்ட் போன்கள் வாங்கினால் ரூ.1000 மானியம் வழங்க வேண்டும் என்பது போன்றவையும் இடம்பெற்றிருந்தன.

ரூ.50 ஆயிரத்துக்கு மேலே வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்தால் நிச்சயம் வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


பினாகா ராக்கெட் சோதனை வெற்றி

பாலாசோர், ஜன.25 தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை குறிபார்த்து தாக்குவதற்காக பினாகா ராக்கெட் 1 தயாரிக்கப்பட்டது. தற்போது அதனை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் மார்க் 2 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பினாகா ராக்கெட் மார்க் 2வின் முதல் கட்ட சோதனை கடந்த 12ம் தேதி வெற்றிகரமாக நடந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நேற்று ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள அய்டிஆர் ஏவுதளத்தில் சாதித்து பார்க்கப்பட்டது.

நேற்று மதியம் சுமார் 12.45 மணி அளவில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner