எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஜன.25 பெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,வங்கிகளில்போலி யானரூ.500மற்றும்ரூ.1000  நோட்டுகள் செலுத்தப்பட்ட தாகக் கண்டறியப்படவில்லை என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மும்பையைச் சேர்ந்த அனில் கல்கலி என்ப வர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மேற்கொண்ட விசாரணைக்குரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டு கள் செல்லாதவை என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 10-ஆம் தேதி வரை அவ்வாறு செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளில் போலி நோட்டுகள் எதுவும் இருந்ததாகக் கண்டறியப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முன்னதாக, பெருமதிப்பு ரூபாய் நோட்டுகளை செல் லாதவையாக அறிவிப்பதற்கு முன்னர், இதுதொடர்பாக மேற் கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்துதகவலறியும்உரி மைச் சட்டத்தின்கீழ் மேற் கொள்ளப்பட்ட விசாரணக்குப் பதிலளிக்க ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.

அந்தஅறிவிப்புக்கு முன்னர் பிரதமரின்தலைமைப்பொரு ளாதார ஆலோசகர், நிதிய மைச்சர் ஆகியோருடன் கலந் தாலோசிக்கப்பட்டதா என்ற மற்றொரு விசாரணைக்கு பிர தமர் அலுவலகமும் பதிலளிக்க மறத்துவிட்டது என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner