எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யார் இந்த வந்தேமாதரக்காரர்கள்?

ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் அறப்போராட்டம் அமைதியாக கட்டுப்பாடாகவே நடந்து வந்தது - உலகமே மூக்கின்மேல் விரலை வைத்தது.  23.1.2017 அன்று காலைமுதல் அதை ரணகளமாக்கியவர்கள் யார்?

‘தேசிய கீதம்‘, ‘வந்தே மாதரம்‘ பாடினால் காவல்துறையினர் அடிக்கமாட்டார்கள் என்று ‘வாட்ஸ் அப்’பில் பரப்பியவர்கள் யார்?

தென்கொரியாவின் தலைநகரில் போய் ‘‘வந்தே மாதரம்‘’ கோஷம் போட்டவர் யார்? இங்குக் கொடுக்கும் குரல் இந்தியாவுக்குக் கேட்கவேண்டும் என்று சொன்ன பிரதமர் மோடியின் வாரிசுகள் உள்ளே புகுந்துவிட்டனர் என்பதுதானே உண்மை!

ஏ.பி.ஷா சொல்லுவதைக்

கவனியுங்கள்!

இப்பொழுது வெளிவரும் திரைப்படங்களிலும், தொலைக் காட்சிகளிலும் பெண்கள் முன்னிலைப் படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் ஒரு கவர்ச்சி நடனப் பாடல், ஒரு பெண்ணை ஆண் தூக்கிச் சென்று காதலிப்பது என்பவைதான் இடம் பெறுகின்றன. இதன் தாக்கம் சமுதாயத்திலும் பிரதிபலிக்கிறது, இதன் காரணமாக பெண்களுக்கு எதிரான  குற்றங்களும் தலைதூக்கி நிற்கின்றன.

- ஏ.பி.ஷா,

டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

அது என்ன தேர்வோ!

இவ்வாண்டுபிளஸ்-டூதேர்வில்பாடங்களில் இல்லாமல்மாணவர்களேசிந்தித்துஎழுதவேண்டியகேள்வி களும் இடம்பெறுமாம். பி.ஜே.பி. அரசு எதைச்  செய்தாலும் அதில் உயர்ஜாதி பலனுக்கான உள்ளடக்கம் இருக்கும் - எச்சரிக்கை!

இது என்ன கூத்து?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தம் குடும்பத்துடன் வந்தார் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ. திருமலை மேல் விமானம் பறக்கத் தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை அவரிடம் வைக்கப்பட்டது.

ஏழுமலையான் கோவிலுக்குமேல் பறப்பதை வேண்டு மானால் தடை செய்யலாம் - திருமலைமேல் பறப்பதைத் தடை செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.

இது என்ன பைத்தியக்காரரத்தனம்? ஏழுமலையான் கோவிலுக்குமேல் ஏன் பறக்கக்கூடாது? யாராவது குண்டு போட்டு விடுவார்கள் என்ற பயமா?

இதுதான் ஏழுமலையான் சக்தியா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner