புதுடில்லி, ஜன.26 உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சி காங் கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. எனவே சமாஜ்வாடி, -காங்கிரஸ் கூட் டணி, பாரதிய ஜனதா, பகு ஜன் சமாஜ், ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நட் சத்திர பேச்சாளர்கள் பட்டி யலில் பிரியங்காவும் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் உத்தரபிரதேச மாநிலம் முழு வதும் சென்று பிரியங்கா பிரச்சாரம் செய்வார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட் டும் முடங்கிக் கிடந்த பிரி யங்கா தற்போது உத்தர பிரதேசம் முழுக்க சூறாவளி பிரச்சாரம் செய்ய முன் வந்தி ருப்பதால் அம்மாநில காங் கிரஸ் தலைவர்கள், தொண் டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரியங் காவை விட அழகான நட் சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர் என பாரதிய ஜனதா எம்.பி., வினய் கட்டி யார் கூறி உள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலை வர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வினய் கட் டியார் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுத் துள்ள பிரியங்கா, ‘சர்ச்சைக் குரிய இந்த கருத்து, நாட்டில் உள்ள பெண்களைப் பற்றி பா.ஜ.க.வின் மனநிலை என்ன என்பதை காட்டியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க.,வின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது’ என்றார்.
வினய் கட்டியார் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், அவரது பெயர், பா.ஜ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.