எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜன.26 உத்தரபிரதேச தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆதரிக்க மாட்டோம் என்று இந்து சாமியார்கள் உயர்மட்ட அமைப்பான அகாரா பரிக்ஷத் கூறி இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உதவவில்லை என்பதால் அந்த அமைப்பு இப்படி கூறி இருக்கிறது.

இது தொடர்பாக மாநில பாரதிய ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியாவிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:- ராமர் கோவில் கட்டுவது என்பது இன்றைய தேர்தல் தொடர்பான விவகாரம் அல்ல. இது மக்களின் நம்பிக்கை விவ காரம். ஆனால், தேர்தல் முடிந்ததும் நாங்கள் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவிலை கட்டுவோம். கோவிலை 2 மாதத்தில் கட்டி விட முடியாது. அதற்கு நாட்கள் வேண்டும். இந்து சாமி யார்களை பொருத்த வரை அனைவருமே பாரதிய ஜனதாவுக்கு பக்க பலமாகவே இருக்கிறார்கள். இதில், எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner