எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்களிடம் முறை தவறி நடந்து கொண்ட

மேகாலயா ஆளுநர்மீது சட்டப்படி நடவடிக்கை தேவை!

இன்றேல், கண்டன ஆர்ப்பாட்டம்!

கழக மகளிர் அணி அறிவிப்பு

பெண்களிடம் முறை தவறியும், அருவருக்கத்தக்க நிலையிலும் நடந்து கொண்ட மேகாலயா ஆளுநரும், மேனாள் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகருமான

வி. சண்முகநாதன் மீது சட்டப்படியான கிரிமினல் நடவடிக்கை தேவை; இன்றேல் திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக மகளிரணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மேகாலயா, அருணாசலப் பொறுப்பு, ஆளுநராக இருந்த வி.சண்முகநாதன், பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்ட புகார்கள் சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவை, வந்துள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் அனுப்பப்பட்டன. இன்று பேட்டியளித்த பாதிக்கப்பட்ட ஒரு பெண், நேர்காணலில் சண்முகநாதன் தன்னிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டார். தன்னிடம் தனது சொந்த வாழ்க்கைப்பற்றி பல தேவையற்ற கேள்விகளைக் கேட்டதோடு, தன்னை இழுத்து அணைத்து முத்தமிட்டார் என்று கூறியுள்ளார் - எவ்வளவு அருவருக்கத்தக்கது இது!

இவர்மீது சட்டப்படி - பாலியல் வன்கொடுமை சட்டப்படியும் கிரிமினல் சட்டப்படியும் - உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இன்றேல் திராவிடர் கழக மகளிரணி  திராவிடர் மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

- அ.கலைச்செல்வி மாநில செயலாளர் திராவிடர் கழக மகளிரணி

- கோ.செந்தமிழ்ச் செல்வி மாநில செயலாளர்  மகளிர் பாசறை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner